தமிழகத்தில் பார்மாலின் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம்; மீன் மார்கெட்டுகளில் ஆய்வு நடத்தினர். கடலில் பிடிக்கப்படும் மீன்கள் விரைவில் கெட்டுவிடும் தன்மை கொண்டது. அதனால், சில வியாபாரிகள் மீன்கள் கெடாமல் இருப்பதிற்காக, பார்மாலின் ரசாயனத்தில் மீன்களை மூழ்க வைத்து எடுக்கின்றனர். இப்படி பார்மாலின் கலவையில் மூழ்கி எடுக்கப்படும் மீன்கள், 15 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் வைத்திருக்க முடியும்.
ரசாயனம் கலந்த மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரல்,
இரைப்பை, பெருங்குடல், சிறுகுடல், சிறுநீரகம், கண், நரம்புகள் பாதிக்கப்படுவதுடன், புற்றுநோய் வருவதிற்கும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
இரைப்பை, பெருங்குடல், சிறுகுடல், சிறுநீரகம், கண், நரம்புகள் பாதிக்கப்படுவதுடன், புற்றுநோய் வருவதிற்கும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
ராமேஸ்வரம்,தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் சூடை,பாரை,கும்லா, நகரை உள்ளிட்ட சில வகை மீன்கள் கிடைக்கிறது. இந்த மீன்களில் 90 சதவீதம் ராமேஸ்வரத்தில் வாழும் உள்ளுர் வாசிகள்; வாங்கி செல்கின்றனர்.
இதே போல் தனுஸ்கோடி பகுதிகளில் பிடிக்கப்படும் சீலா, மாவுலா, போன்ற விலை உயர்த ரக மீன்களை வெளியீர்களில் இருந்து வரும் வியாபாரிகள் மீன் மாகெட்டில் வாங்கி மீன்கள் கெட்டு போகமல் இருக்க ஜஸ் அடைத்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அப்படி அனுப்படும் மீன்களில ராசாயனங்கள் எதுவும் சேர்க்கபடுகிறதா அல்லது கெட்டு போன மீன்களை பதபடுத்தி அனுப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லிங்கவேல் மற்றும் ராமேஸ்வரம் மீன் வளத்துறை ஆய்வாளர் ஆகியோர் ராமேஸ்வரம் மார்க்கெட் மீன் கடைகளிலும்
மொத்த வியாபாரிகளிடம் இருந்த மீன்களை ஆய்வு செய்தனர்.
மொத்த வியாபாரிகளிடம் இருந்த மீன்களை ஆய்வு செய்தனர்.