புதிய வட்டிச் சலுகை நடப்பு நிதியாண்டின் முடிவு நாளான மார்ச் 31-ம் தேதிக்குள் பெறப்படும் இருவகைக் கடனுக்கான வட்டிச் சலுகை இது. அதாவது, வீட்டுக்கடன் பெறும் சம்பளதாரர்களுக்கு கடனுக்கான வட்டியில் ரூ.2 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை பெற்று வருகிறது. 2019 – 20 நிதியாண்டுக்குள் இதே வீட்டுக் கடன் பெறுவோர்க்கு, முன்னதாக அமலில் உள்ள இரண்டு லட்சம் ரூபாய் வரிச்சலுகையுடன் மேலும் 1.5 லட்சம் ரூபாய் வரை, வட்டிக்கான
வரிச்சலுகை கிடைக்கும் என்பதும், நடப்பு நிதியாண்டுக்குள் மின் வாகனக் கடன் பெறும் சம்பளதாரர்களுக்கு, அவர்கள் கடனுக்காகச் செலுத்தும் வட்டியில், அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெறவும் செய்யலாம் என்பதும் கடந்த ஆகஸ்ட் மாதம் செய்யப்பட்ட அறிவுப்புகள் கூடுதல் சலுகைகள்! இந்த இரண்டு சலுகைகளும் புதியவை என்பதால், என்னதான் சலுகைக் குறைப்பு நடைமுறைக்கு வந்தாலும், இந்தப் புதிய சலுகைகள், அறிவித்த மாத்திரத்திலேயே ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
எனவே, தேவைப்படுமாயின், வீட்டுக்கடன் மற்றும் மின் வாகனக் கடன்களை நிதியாண்டு முடிவதற்குள் பெற்றுவிட முயற்சி செய்யலாம். முன்னதாகக் கடன் கோரி விண்ணப்பித்திருந்து, கோரிய கடன் கைக்கு வராமல் இருந்தால், அதற்கான பரிசீலனையைத் துரிதப்படுத்த முயற்சி எடுக்கலாம். வருமான வரிச் சலுகை vikatan பிராவிடண்ட ஃபண்ட் மேற்கண்ட புதிய சலுகைகள் தவிர, ஏற்கெனவே உள்ள அங்கீகரிக்கப்பட்ட பிராவிடண்ட் ஃபண்டுகளுக்கான சலுகை. அதாவது, அங்கீகரிக்கப்பட்ட ஜி.பி.எஃப்., சி.பி.எஃப்., இ.பி.எஃப் மற்றும் எத்தனையோ விதமான பிராவிடண்ட் ஃபண்டுகளில் செலுத்தப்படும் மாதாந்திர சந்தாவின் வட்டியானது 9.5 சதவிகிதத்துக்கு உட்பட்டு இருந்தால், அந்த வட்டித் தொகை எவ்வளவாக இருந்தாலும், அந்தத் தொகை வருமானம் என்ற கணக்கில் சேராது. வருமானக் கணக்கில் சேர்க்கப்படாததால் இதற்கு வரி விதிப்பும் கிடையாது. எனவே, பிராவிடண்ட் ஃபண்ட் சந்தாவை இயன்ற அளவு அதிகரிப்பதன்மூலம்
, அதிகபட்ச வரிச்சலுகையைப் பெற முடியும். ஏனெனில் தற்போதைய அதிகபட்ச பி.எஃப் வட்டி 8.65% மட்டுமே. ஒவ்வொரு நிதியாண்டிலும் மேற்கொள்ளப்படும் கடைசி நேர சேமிப்பு மற்றும் முதலீடுகள், அந்த நிதியாண்டுக்கு மட்டுமின்றி, அடுத்துவரும் நிதியாண்டுக்கும் பயன் தரக்கூடியதாக இருப்பது நல்லது. எனவே, பட்ஜெட் அறிவிப்பு வரை காத்திருந்து, நமக்கு ஒத்துவரக்கூடியதும், அதிக சலுகை தரக் கூடியதுமான முதலீட்டு வகைகளை தேர்வு செய்யலாம். அது மட்டுமல்ல – வரப்போகிற பட்ஜெட் சலுகைகள் வழக்கமானவை அல்ல
. பரிந்துரையின் பேரிலானவை என்பதால், பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகும் கூட, கோரிக்கைகளின் அடிப்படையில் சலுகைகள் அதிகரிக்கப்படலாம். பொறுமை அவசியம்.