சென்னை,
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியானது. இதில் மனிதநேய மையத்தில் படித்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். அண்ணாவின் கொள்ளு பேத்தி பிரித்திகா ராணி வெற்றி பெற்றார்.
முதன்மை தேர்வு
ஐ.ஏ.எஸ்.
, ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 26 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இந்த பணிகளுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும். அந்த வகையில் சிவில் சர்வீசஸ் பணிகளில் 896 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 11 ஆயிரத்து 845 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 610 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை முதன்மை தேர்வு நடைபெற்றது
, ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 26 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இந்த பணிகளுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும். அந்த வகையில் சிவில் சர்வீசஸ் பணிகளில் 896 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 11 ஆயிரத்து 845 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 610 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
. இந்த தேர்வின் முடிவுகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் www.upsc.gov.in என்ற தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.
சைதை துரைசாமி தகவல்
முதன்மை தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயின்ற 57 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தொடர்பாக மனிதநேய அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மனித நேய மையத்தில்
சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் தங்குவதற்கு விடுதி, உணவு, பொது அறிவு குறிப்புகள், பத்திரிகைகள், உபகரணங்கள் உள்பட அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்பட்டது.

முதன்மை தேர்வில் எங்கள் மையத்தில் படித்த 37 மாணவர்களும், 20 மாணவிகளும் என மொத்தம் 57 பேர் வெற்றி பெற்றுள்ளனர்
. இவர்களில் 8 மாணவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற நேர்முக தேர்வில் பங்கேற்றவர்கள் ஆவார்கள். பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளத்தின் பேத்தி எம்.பிரித்திகா ராணி தேர்ச்சி பெற்றுள்ளார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.ஐஸ்வர்யா (வயது22) என்ற மாணவி முதல் முயற்சியிலேயே நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளார்.

வாழ்த்து
முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் நேர்முக தேர்வுக்கான பயிற்சி மனிதநேய மையத்தில் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் தங்களுடைய சமீபத்திய ‘பாஸ்போர்ட்’ அளவு புகைப்படம், முதன்மை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள மனிதநேய பயிற்சி மையத்தில் வருகிற 20-ந்தேதி முதல் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பதிவு செய்துக் கொள்ளலாம்.

நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும்
மாணவ-மாணவிகளுக்கு சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இலவச தங்கும் விடுதி, தரமான உணவு வழங்கப்படும். நேர்முக தேர்வில் பங்கு பெற டெல்லி சென்று வருவதற்கான விமான டிக்கெட், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் வசதி, உணவு, மாணவர்களுக்கு தரமான காலணிகள், கோட்-சூட், மாணவிகளுக்கு புடவை, சுடிதார், காலணிகள் ஆகியவை இலவசமாக அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்று முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற அண்ணாவின் கொள்ளுப்பேத்தி எம்.பிரித்திகா ராணி உள்பட மாணவ-மாணவிகள் சைதை துரைசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.