தாய் குழந்தையை தாக்காமல் தாண்டிச்சென்ற காளை.சிராவயலில் சிலிர்பான தருணம்... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தாய் குழந்தையை தாக்காமல் தாண்டிச்சென்ற காளை.சிராவயலில் சிலிர்பான தருணம்...




களத்தில் கடும் கோபமாக வளர்த்தவர் மீதே பாயும் சில காளைகள் மத்தியில், தவறி களத்திற்குள் வந்த ஒரு பெண்ணையும் அவர் குழந்தைகளையும் தாக்காமல் தாண்டி சென்ற காளையின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு ஆகிய பாரம்பரிய போட்டிகள் நடைபெறுவது வழக்கம். உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்து முடிந்து பரிசுகளும் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று மாவட்டம் பகுதியில் மஞ்சு விரட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது. அப்போது போட்டிக்காக கிண்டு வரப்பட்ட காளை ஒன்று சின்ன யானை வண்டியில் கட்டப்பட்டிருந்த நிலையில் திடீரென அவிழ்த்துக்கொண்டு ஆக்ரோஷமாக ஓட தொடங்கியது. அப்போது அந்த மைதானத்தில் குழந்தைகளுடன் பெண் ஒருவர் தவறுதலாக வந்துள்ளார்.


இந்த நேரத்தில் அவர்களை நோக்கி சீறி பாய்ந்த காளையிடம் தப்பிக்க அந்த பெண் தனது குழந்தைகளை அணைத்துக்கொண்டு கீழே அமர்ந்தார். ஒரு வினாடியில் அந்த காளை அவர்களை சிறிதும் உரசாமல் தாவி சென்றது. இந்த வீடியோவை எடுத்த பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இதையடுத்து அந்த வீடியோ லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஆனால்,
இதில் மற்றொரு உண்மை என்னவென்றால், மாடு அந்த பெண்ணின் குடும்பத்தை நோக்கி வரும் போது அங்கிருந்தவர்கள் பல ஆங்கிளில் வீடியோ எடுத்துள்ளனர். ஆனால் அதில் ஒருவர் கூட அப்பெண்ணை காப்பாற்ற முன் வரவில்லை. மாட்டை வேறு வழியில் செல்ல முயற்சி செய்திருக்கலாம் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

Subscribe Here