IMPART செயல்திட்டம் தொடர்பான CEO செயல்முறைகள்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

IMPART செயல்திட்டம் தொடர்பான CEO செயல்முறைகள்!






திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் வருகை பதிவை உயர்த்துதல் செயல் திட்டம் ( IMPART ) செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது
. திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 பள்ளிகளில் IMPART செயல்திட்டம் நடைபெற்று வருகிறது . அதனைத் தொடர்ந்து கல்வி மாவட்ட அளவில் 23 . 01 . 2020ம் தேதி அன்று சிறந்த செயல் திட்டத்தை தேர்வு செய்வதற்கான காட்சிப் படுத்துதல் நிகழ்வு அந்தந்த வட்டார வளமையத்தில் ( திண்டுக்கல் , பழநி , வத்தலக்கண்டு , வேடசந்தூர் ) யில் நடைபெற்று முடிந்தது . கல்வி மாவட்ட அளவில் ஒவ்வொறு பள்ளியிலிருந்தும் 1ஆசிரியர் மற்றும் 5 பாடங்களில் ( குழுத் தலைவர் ) பாடம் ஒன்றுக்கு 1 மாணவர்கள் வீதம் 5 ( மொத்தம் - 6 ) நபர்கள் கலந்து கொண்டனர்
.

இதனைத் தொடர்ந்து கல்வி மாவட்ட அளவில் வெற்றி பெற்ற தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் பாடங்களில் முதல் , இரண்டு , மூன்றாம் இடம் பிடிக்கும் மாணவ / மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் காட்சிப்படுத்துதல் நிகழ்வில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Subscribe Here