10, 11, வர உள்ள நிலையில் தேர்வெழுதும் ஸ்கெட்ச், வண்ண பென்சில்களைப் பயன்படுத்தக் கூடாது என அரசு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11, மாணவர்களுக்கான மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்காக தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். தேர்வுத்துறையும் தேர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இதுகுறித்து விடுத்துள்ள அறிவிப்பு:
* தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுரைகள் போஸ்டராக பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டு இருக்கும். இதுமட்டுமின்றி தேர்வின்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அரசு தேர்வு நுழைவுச் சீட்டில் (ஹால்டிக்கெட்) அறிவுரையாக அச்சிடப்பட்டுள்ளது. * மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் அவர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது. அதில், பிறந்த தேதி,
நிரந்தரப் பதிவெண், பதிவெண், தேர்வு மையத்தின் பெயர், முகவரி, மாணவர் பயின்ற பள்ளியின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
* தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் காண்பித்தால் மட்டுமே, தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
* செல்போன்
அல்லது இதர தொலைத்தொடர்பு சாதனங்கள் வளாகத்துக்குள், தேர்வு அறையினுள் எடுத்து வர அனுமதி இல்லை.
* அனைத்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கும் எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் (சொல்வதை எழுதுபவர்கள், மொழிப்பாட சலுகை) உள்ளிட்ட அரசாணையின் விதிகளின்படி வழங்கப்படும்.
* தேர்வில் விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள், கலர் பென்சில்களை பயன்படுத்தக் கூடாது.
* தேர்வர்கள் விடைத்தாள் புத்தகத்தில் உள்ள பக்கங்களை எக்காரணம் கொண்டும் கிழிக்கவும் அல்லது தனியாகப் பிரித்து எடுத்துச் செல்லவும் கூடாது.
* தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், பிற தேர்வரைப் பார்த்து எழுதுதல், விடைத்தாள்களை பரிமாறிக் கொள்ளுதல், ஆள்மாறாட்டம் செய்தல் கூடவே கூடாது.
* தமது விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும், தாமே கோடிட்டு அடித்தல்
போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடக் கூடாது.
* தேர்வர்கள் அவ்வாறான தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.