வங்கியில் FD. வைத்திருப்பவர்களுக்கு இனி 5 லட்சம் கேரண்டி... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வங்கியில் FD. வைத்திருப்பவர்களுக்கு இனி 5 லட்சம் கேரண்டி...




ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு, வங்கியில் ஃபிக்ஸட்
டெபாசிட் போட்டு வரும் வட்டி வருமானத்தில்
வாழ்வதைத் தான் அவர்களின் பெரிய முதலீட்டுத் திட்டமாக இருக்கும்.
இன்று உலகத்தில் பணத்தை முதலீடு செய்து, வரும் லாபத்திலோ அல்லது மற்ற வழிகளில் இருந்து வரும் முதலீட்டு வருமானங்களிலோ வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை.
ஆனால் இன்று வரை, பல தரப்பு மக்களும் நம்பி இருக்கும் ஒரு பெரிய முதலீடு என்றால் அது ஃபிக்ஸட் டெபாசிட் தான்.




பொது மக்களுக்கான FD வட்டி

எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
(2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்). இந்த வட்டி விகிதங்கள் 10 நவம்பர் 2019 முதல் அமலுக்கு வந்தது.
SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days-4.50%
46 days to 179 days-5.50%
180 days to 210 days-5.80%
211 days to less than 1 year-5.8%
1 year to less than 2 year-6.10%
2 years to less than 3 years-6.10%
3 years to less than 5 years-6.10%
5 years and up to 10 years-6.10%


மூத்த குடிமக்களுக்கான FD வட்டி

மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்). இந்த வட்டி விகிதங்கள்
10 நவம்பர் 2019 முதல் அமலுக்கு வந்தது.
Senior Citizen SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days-5.00%
46 days to 179 days-6.00%
180 days to 210 days-6.30%
211 days to less than 1 year-6.30%
1 year to less than 2 year-6.60%
2 years to less than 3 years-6.60%
3 years to less than 5 years-6.60%
5 years and up to 10 years-6.60%

வட்டி கம்மி

மேலே சொல்லி
இருப்பது போல, எஸ்பிஐ போன்ற பெரிய வங்கியே, தன் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிகபட்சமக 6.6 சதவிகிதம் தான் வட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த அளவுக்கு குறைவான வட்டி என்றாலும் பரவாயில்லை, போட்ட பணம் வந்துவிடும் என்கிற நம்பிக்கையில் தான், மக்கள் வங்கிகளிடம் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்கிறார்கள்.
" data-gal-desc="அந்த பாதுகாப்பே தகர்ந்து விட்டால் என்ன ஆகும்..? பொதுவாக வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டில்
முதலீடு செய்பவர்களுக்கு ஒரு சின்ன பாதுகாப்பு இரு..." data-gal-headline="பாதுகாப்பு" பாதுகாப்பு

பாதுகாப்பு

அந்த பாதுகாப்பே தகர்ந்து விட்டால் என்ன ஆகும்..? பொதுவாக வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு சின்ன பாதுகாப்பு இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். நாம் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடும் பணம் எவ்வளவாக
இருந்தாலும், ஒரு லட்சம் ரூபாய்க்கு கேரண்டி கொடுப்பார்கள்.


எதற்கு ஒரு லட்சம்

வங்கி ஏதாவது சிக்கலுக்கு உள்ளாகி, சரியாக இயங்க முடியாமல், கையில் பணம் இல்லாமல் போனால், வங்கியை நம்பி தங்கள் பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுப்பார்கள்.
இதை depositors insurance credit guarantee corporation என்கிற ஆர்பிஐயின் துணை நிறுவனம் தான் கொடுக்கும்.
2020 - 21 பட்ஜெட்டில், ஒரு டெபாசிட்டர், ஒரு
வங்கியில் தன் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டாகப் போட்டு இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அந்த வங்..." 5 லட்சம்

5 லட்சம்

2020 – 21 பட்ஜெட்டில், ஒரு டெபாசிட்டர், ஒரு வங்கியில் தன் பணத்தை ஃபிக்ஸட்
டெபாசிட்டாகப் போட்டு இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அந்த வங்கி ஏதாவது சிக்கலுக்கு உள்ளாகி செயல்படாமல் போனால், இனி depositors insurance credit guarantee corporation நிறுவனம், அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் கொடுக்கும் என பட்ஜெட்டில் அறிவித்து இருக்கிறார்கள்.
எனவே, இனி வங்கியை நம்பி, மேலும் ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்ய அரசு வழி செய்து இருக்கிறது. வாழ்த்துக்கள்
.

Subscribe Here