
புதுச்சேரி பாக்குமுடையான்பட்டு அருகே கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது . அப்பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 9ஆம் தேதி ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது தனது ஏடிஎம் கார்டை மெஷினில் புகுத்தினார். இந்த நிலையில் பின் நம்பர் பதிவு செய்யும் இடத்திற்கு மேலே வித்தியாசமான கருவி இருப்பதை கண்டார். உடனே இதுபற்றி லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்து போலீசார் சோதனை நடத்தினர். இந்த சூழலில் பின் நம்பர் பதிவு செய்யும் இடத்திற்கு மேலே இருந்த ஸ்டிக்கரை அகற்றினர். அதில் ரகசிய கேமிரா, பேட்டரி, மெமரி கார்டு உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.
இதுபற்றி உடனே சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தனர். அதில் ஒரு காரில் இரண்டு பேர் வந்து ஏடிஎம் மையத்திற்குள் செல்கின்றனர்.
பின்னர் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்திச் செல்வது தெரிந்தது. அந்த காரின் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர்.
அதில் சென்னையை சேர்ந்த கார் என்று தெரியவந்தது. உடனே அந்த முகவரிக்கு சென்று போலீசார் விசாரித்தனர்.
அதில் சென்னையை சேர்ந்த கார் என்று தெரியவந்தது. உடனே அந்த முகவரிக்கு சென்று போலீசார் விசாரித்தனர்.
அங்கு நைஜீரிய நாட்டை சேர்ந்த ஜேஷர் செலஸ்டின் என்ற நபர் இருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் தவறு செய்ததை ஒப்புக் கொண்டார். மரைன் எஞ்சினியரான இவர், ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்
இதன்மூலம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடி வந்துள்ளார்.
அவரை கைது செய்த போலீஸ் லேப்டாப், கார், போலி ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அவரை கைது செய்த போலீஸ் லேப்டாப், கார், போலி ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த குற்றத்தில் மேலும் இரு வெளிநாட்டவருக்கு தொடர்பிருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருடும் நிகழ்வுகள் வேறு எங்காவது இருக்கிறதா என்று விசாரித்து வருகின்றனர். அதன்மூலம் இரண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளனர்
.
.