சென்னை,
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதாசாரம் எவ்வளவு உள்ளது? என்பது குறித்து மத்திய அரசு தனது புள்ளிவிவர பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதாசாரம் வரையறுக்கப்பட்ட அளவில் உள்ளதா? என்பதை மாவட்டம் வாரியாக ஆய்வுசெய்ய தொடக்கக்கல்வி இயக்ககம் திட்டமிட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் பழனிசாமி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும், அவரவர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர், மாணவர் பணியிட நிர்ணய பிரிவு கண்காணிப்பாளர் மற்றும் பணியிட நிர்ணயம், நன்கு தெரிந்த ஒரு வட்டாரக் கல்வி அலுவலரை அவரவர் மாவட்ட புள்ளிவிவரங்களுடன் சென்னையில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும்
வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் சென்னையில் தொடக்கக் கல்வி இயக்குனர் பழனிசாமி தலைமையில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இதில் கலந்துகொள்ளும் அதிகாரிகள் தங்களுடைய மாவட்டத்தின் உண்மை தகவலை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.