பள்ளி மாணவர்களை மூட்டைபோல் அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லும் ஆட்டோக்களால் விபத்து அபாயம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளி மாணவர்களை மூட்டைபோல் அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லும் ஆட்டோக்களால் விபத்து அபாயம்


விருதுநகர்: விருதுநகரில் பள்ளி மாணவர்களை மூட்டைபோல் அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லும் ஆட்டோக்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.விருதுநகரில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இவர்கள் பள்ளி, கல்லூரிக்கு சொந்தமான வாகனங்களிலேயே செல்கின்றனர். சில பள்ளிகளில் பேருந்து வசதி இல்லை. இதனால் பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆட்டோக்கள், வேன்களில் அனுப்பி வைக்கின்றனர்.பழைய பஸ்நிலையம், டிடிகே ரோட்டில் உள்ள பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் ஆட்டோ, வேன்களில் வந்து செல்கின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி, இறக்கும் வேன்கள், ஆட்டோக்கள் முறையான அனுமதி பெற வேண்டுமென்ற நிபந்தனை உள்ளது. சாதாரண ஆட்டோக்களில் 3 பேரும், ஷேர் ஆட்டோ மாடல்களில் 5 பேரை மட்டும் ஏற்றி செல்ல வேண்டுமென்ற விதிமுறைகள் உள்ளன.ஆனால், விருதுநகரில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட மூன்று மடங்கு அளவிற்கு மாணவ-மாணவிகள் வேன்கள், ஆட்டோக்களில் ஏற்றி செல்லப்படுகின்றனர். ஆட்டோக்களின் மேற்பகுதியில்
மாணவ, மாணவிகளின் புத்தக மூடைகளை வைத்துக் கொண்டு உள்பகுதியில் 15 மாணவர்கள் வரை ஏற்றி செல்கின்றனர்.
அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மாணவர்களை ஏற்றி சென்றால் மாத வாடகை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கட்டுபடியாகாது. பெற்றோரும் குழந்தைகள் பள்ளிக்கு போனால் போதும் என்ற நோக்கில் கூட்டம் அதிகம் இருந்தாலும் ஆட்டோக்களில் அனுப்பி வருகின்றனர்.மின்னல் வேகத்தில் சந்து, பொந்துகளில் பறக்கும் ஆட்டோக்களில் பயணிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளம், மேடுகளில் ஒருவர் மீது ஒருவர் இடித்து
பள்ளி போகும் முன்பே களைப்படைந்து விடுகின்றனர். ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே மாணவ, மாணவிகளை ஏற்றி செல்வதை போலீசார் கண்காணிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.போக்குவரத்து போலீஸ் உதவி ஆய்வாளர் மரியஅருள் கூறுகையில், ‘ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட 3 முதல் 5 பேர் வரை ஏற்றி செல்லலாம். மாணவர்கள் என்பதால் ஒருவர் கூடுதலாக இருக்கலாம். அதிக மாணவ, மாணவிகளை ஏற்றி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்
.

Subscribe Here