அரசு அலுவலகங்களில் தாமத வருகையை தடுக்க பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை அமல்படுத்தக்கோரி வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசு அலுவலகங்களில் தாமத வருகையை தடுக்க பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை அமல்படுத்தக்கோரி வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்



மதுரை: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:பொதுமக்களின் நலன் சார்ந்த பணியில் அரசு
ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியாற்ற வேண்டியது அரசு ஊழியர்களின் கடமை. ஆனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் நேரத்தை முறையாக பின்பற்றுவதில்லை. அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக பணிக்கு வரவேண்டும் என்பதற்காக, மத்திய அரசு அலுவலகங்களில் பயோ-மெட்ரிக் வருகை பதிவேடு முறை கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறை தமிழகத்திலுள்ள
141 மத்திய அரசு துறை சார்ந்த நிறுவன மற்றும் அமைப்புகளில் அமலில் உள்ளது.இந்த நடைமுறையால் தாமத வருகை தவிர்க்கப்படும். இந்த நடைமுறை சமீபத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த நடைமுறை தமிழக அரசின் பெரும்பாலான அரசுத்துறைகளில் பின்பற்றப்படவில்லை. அரசு ஊழியர்களின் முறையான வருகையை உறுதிப்படுத்திடும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர், மனு குறித்து உள்துறை செயலர், பொது மற்றும் பணியாளர் நலன் துறை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Subscribe Here