2020 மார்ச் 31ம் தேதிக்குள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காதவர்களின் பான் அட்டை செயல்படாததாக அறிவிக்கப்படும்.
12 இலக்க எண் கொண்ட ஆதார் எண் UIDAI யால் வழங்கப்படுகிறது.
10 இலக்க எண் மற்றும் எழுத்தைக் கொண்ட பான்கார்டு வருமானவரித்துறையால் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அனைத்து விதமான பணிகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால்
ve="true"> , ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மத்திய அரசு 7 முறை காலஅவகாசம் வழங்கியிருந்தது.
அந்த நடைமுறையை மேற்கொள்ள தற்போது மார்ச் 31ம் தேதி வரை இறுதி கெடு விதிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 139 AA உட்பிரிவு 2 படி பான் எண் வைத்திருக்ககும் நபர், அவரது 12 இலக்க ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும்.
வருமான வரித்துறையின் தகவலின் படி இதுவரை 30.75 கோடி பேர் தங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைத்துள்ளனர்
மேலும், 17.58 கோடி பேரின் பான் எண்ணை ஆதார் கார்டுடன் இதுவரை இணைக்கவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது
.
நீட்டிக்கப்பட்ட சேவையை பயன்படுத்தி ஆதாருடன், பான் எண்ணை இணைக்கவில்லை என்றால், தங்களின் பான் எண் செயலிழந்து விடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்க குறுஞ் செய்திகள் மூலமாகவும், இணையத்தின் மூலமாகவும் மேற்கொள்ளலாம்.
Step 1
➤இணையத்தில் வருமான வரித்துறையின் e-filing பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
Step 2
➤அந்த பக்கத்தின் இடது புறத்தில் ஆதார் தகவல் கேட்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் 10 இலக்க பான் எண்ணை பதிவு செய்யவேண்டும்.
Step 3
➤தகவலை பதிவு செய்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறியீடுகளை பதிவு செய்ய வேண்டும். பார்வையற்றோருக்கு மொபைல் போனில் ஒரு முறை மடுமே பயன்படுத்த எண் அனுப்படும்.
ve="true">
அதை உள்ளீடு செய்து தொடரலாம்.
Step 4
➤இறுதியாக 'Link Aadhaar பட்டனை அழுத்தினால் போதும்
மேலும் குறுஞ்செய்திகள் மூலமாக மேற்கொள்ள, உங்கள் மொபைலில் UIDPAN என்று டைப் செய்து<space> <12-இலக்க ஆதார் எண்.> <space> <10 இலக்க பான் எண்> இறுதியாக 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
மறக்காம இந்த லிங்கை கிளிக் செய்து உடனே செஞ்சு முடிங்க...
https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html
┈┉┅━•• 🌿👨🏻💻🌷👩🏻💻 🌿••━┅┉┈