எழும்பூரில் உள்ள ஹாக்கி மைதானத்தில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி மற்றும் கைப்பந்து
போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இதை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
கல்வித்துறைக்கு எந்த அளவுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மாணவர்களின் விளையாட்டு நலனையும் அரசு கவனமாக கவனித்து வருகிறது.
மேலும் 2012-ல் இருந்து நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பெயரில்லா கடிதம் வந்தது. அதுபற்றி விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது
. அதில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என கண்டறியப்பட்டிருக்கிறது, இந்த தகவலையும் நீதிமன்றத்தில் கொடுக்க உள்ளோம்.
. அதில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என கண்டறியப்பட்டிருக்கிறது, இந்த தகவலையும் நீதிமன்றத்தில் கொடுக்க உள்ளோம்.
10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27.ல் தொடங்கி ஏப்.13ல் நிறைவு பெறுகிறது. மே.4ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.
பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4.ல் தொடங்கி மார்ச்.26 இல் நிறைவு பெறும். மே.14ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.
பிளஸ்2 பொதுத்தேர்வு
மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு பெறும். ஏப்.24ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.
மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு பெறும். ஏப்.24ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும்,
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர்.
பொது தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் அரசு சிறப்பாக செய்து வருகிறது
.
.
இவ்வாறு அவர் கூறினார்.