வணக்கம் தோழர்....
*TADACCOM -*
*தமிழ்நாடு அனைத்துத் துறைச் சங்கங்களின்* *ஒருங்கிணைப்புக் குழு* *கூட்டம் இன்று (29/02/2020 சனிக்கிழமை) திருச்சியில் நடைபெற்றது....*
மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் S.தமிழ்ச்செல்வி தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது....
ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர்
G.இலட்சுமணன் வரவேற்புரையாற்றினார்...
மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். N.ஜனார்த்தனன் கூட்ட நோக்கம் குறித்தும்....
கடந்த கால நடவடிக்கைகள் குறித்த ஆய்வு குறிப்புகளையும்....
எதிர்கால செயல்பாடுகள் மற்றும் இயக்க நடவடிக்கைகளுக்கான முன்மொழிவுகளையும்....
இக் கூட்டத்தில் முன்வைத்துப் பேசினார்.....
ஒருங்கிணைப்பு குழுவில் அங்கம் வகிக்கும் துறைச்சங்கங்கள் சார்பிலான
ஆலோசனைகளை ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் விவாதமாக முன்வைத்தனர்......
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள்
பொதுச் செயலாளர் தோழர் இரா.பாலசுப்பிரமணியன் அவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.....
விவாதம் மற்றும் ஆலோசனைகளை முழுமையாக பரிசீலித்து கீழ்கண்ட முடிவுகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட பின்னர், தமிழ்நாடு வணிக வரிப் பணியாளர் சங்க மாநிலப் பொருளாளர்
தோழர்.வளன் அரசு நன்றி கூற கூட்டம் இனிதே முடிவடைந்தது.....
கூட்டத் தீர்மானங்கள்...
1) நமது தேச நலனையும்
தேசத்தின் இறையாண்மையையும் பாதிக்கும் தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும்....
2) தேசிய குடியுரிமை திருத்த அடிப்படையிலான தேசிய மக்கள் தொகை பதிவேட்டு கணக்கெடுப்பை (NPR) தமிழகத்தில்
நடத்தும் முடிவை கைவிடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்வது எனவும்.....
3) TADACCOM சார்பில் சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கத்தை எதிர் வரும்....
09.03.2020 அன்று மதுரையிலும்.....
28.03.2020 அன்று ஊட்டியிலும்....
மிகச் சிறப்பாக நடத்துவது எனவும்.....
4) தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இணைப்புச் சங்க தோழர்களைத் திரட்டி மண்டல கருத்தரங்கை எதிர்வரும்.....
21.03.2020 அன்று தர்மபுரியிலும்....,
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்ட தோழர்களை திரட்டி
04.04.2020 அன்று நாகப்பட்டினத்திலும்.....
மண்டல கருத்தரங்கம்
மிகச் சிறப்பாக நடத்துவது எனவும்......
5) எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் TADACCOM மாவட்ட
அமைப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்துவது எனவும்.....
முதல் மாவட்ட அமைப்புக் கூட்டத்தை எதிர்வரும் 02.03.2020 அன்று மதுரையில் கூட்டுவது எனவும்......
6) எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் TADACCOMன் கோரிக்கைகளை அனைத்து மாவட்ட அமைப்புகளும் எழுத்து பூர்வமாக தயாரித்து...
அந்தந்த மாவட்ட அமைச்சர்களை சந்தித்து வழங்கி, விரிவாக விளக்கிப் பேசி.....
மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு தமிழக அமைச்சர்களிடம் கோருவது எனவும்......
7) எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் தேதியன்று கோரிக்கைகளை வலியுறுத்தி எல்லா அரசு அலுவலங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும்....
8) மே 6ஆம் நாளன்று TNGEA அமைப்பு தினத்தை மிகவும் எழுச்சியுடன், கொடி ஏற்றி கொண்டாடுவது எனவும்.....
9) எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில்.....
தமிழகத்தின் 10 மாவட்ட தலைநகரங்களில்
மாலை நேர மண்டல தர்ணா போராட்டம் நடத்துவது எனவும்....
10) எதிர்வரும் ஜூன் 15 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்களை சந்தித்து கோரிக்கைகளை விளக்கி பிரச்சாரம் செய்வது எனவும்.....
(சூழலுக்கு ஏற்ப இந்த பிரச்சாரத்தை மக்கள் சந்திப்பு இயக்கமாக மாற்றுவது குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிப்பது)
11) எதிர்வரும் ஜூலை 2, எழுச்சி தினத்தன்று, TADACCOM சார்பில் ஒரு நாள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது எனவும்.....
12) கடந்த 20.2.2020 அன்று துறைவாரிச் சங்க பணி நிமித்தமாக சென்னை வருகை புரிந்த TNGEA முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் தோழர்.S. தமிழ்ச்செல்வி அவர்களை TNGEA மாநில மையத்திற்குள் அனுமதிக்க மறுத்த TNGEA மாநிலத் தலைமையின் நடவடிக்கைகளை வண்மையாக கண்டிப்பது எனவும்.....
13) TNGEA அமைப்பு விதிகளுக்கு முரணாக மாநில செயற்குழு உறுப்பினர்களான கரூர் மாவட்டத் தலைவர் தோழர் மகாவிஷ்ணன் அவர்களையும்....
திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர்
வளன் அரசு அவர்களையும், அவர்கள் வகித்து வரும் பொறுப்பிலிருந்து நீக்க ஆலோசனை வழங்கிய, TNGEA மாநிலத் தலைமையை கண்டிப்பது எனவும்....
14) திருச்சி மாவட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்களாக
செயல்படும் தோழர்.வை.மோகன் மற்றும் தோழர்.ஜி. இலட்சுமணன் ஆகியோரை நீக்கும் மாவட்டத் தலைவரின் முன்மொழிவை மாவட்ட செயற்குழு பெரும்பான்மை அடிப்படையில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நிராகரித்த பின்னரும் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக whatsApp செய்தி வெளியிட்ட மாவட்டத் தலைவரின் ஜனநாயக விரோத செயல்பாட்டை கண்டிப்பது எனவும்.....
16) TADACCOM ன் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களாக
வேலூர் தோழர்.G.மோகனமூர்த்தி மற்றும் கரூர் தோழர்.மஹாவிஷ்ணன் ஆகியோரை இணைத்துக் கொள்வது எனவும்.....
முடிவாற்றப்பட்டுள்ளது.
மேற்கண்ட TADACCOM போராட்டங்களில் கீழ்கண்ட கோரிக்கைகளான
1) புதிய பென்சன் திட்டத்தை திரும்பப் பெற்று பழைய பென்சன் திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும்....
2) ஊதிய முரண்பாடுகளை களைய தமிழக அரசால் அமைக்கப்பட்ட திரு சித்திக் IAS தலைமையிலான குழு பரிந்துரைகளை தமிழக அரசு அமுல்படுத்திட வேண்டும்...
2) சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்களை, முழு நேர அரசு ஊழியர்களாக அறிவித்து உரிய காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்....
3) தமிழக அரசு ஊழியர்கள் கடந்த கால ஜேக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக, வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணைகளையும், பணி மாறுதல் உள்ளிட்ட தண்டணைகளையும்,
முழுமையாக இரத்து செய்வதுடன் அனைத்துவிதமான குற்ற வழக்குகளையும் தமிழக அரசுவாபஸ் பெற வேண்டும்....
4) தமிழக அரசு நில அளவைத் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட்டு....
கடந்த காலங்களைப் போன்றே நில அளவைப் பணியை தமிழக அரசே மேற்கொள்ள வேண்டும்....
5) நெடுஞ்சாலைத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு முற்றிலும் கைவிட வேண்டும்.....
என்ற கோரிக்கைகள் உள்ளிட்ட துறை சங்கங்களின் மிகப் பிரதானமான கோரிக்கைகளை இணைத்துக்
கொண்டு வலியுறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்...
எஸ்.தமிழ்ச்செல்வி
என்.ஜனார்த்தனன்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு
TADACCOM.
💪💪💪💪💪💪💪💪💪💪💪