TNPSC சான்றிதழ் பதிவேற்றும் விவகாரம் நீதிமன்றம் புதிய உத்தரவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

TNPSC சான்றிதழ் பதிவேற்றும் விவகாரம் நீதிமன்றம் புதிய உத்தரவு



டிஎன்பிஎஸ்சி தேர்வு

எழுத்துத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று இணையதளத்தில் சான்றிதழ்களை சரியாகப் பதிவேற்றம் செய்யாதவா்களை, சனிக்கிழமை (பிப். 29) நடைபெற உள்ள கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்
என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவையைச் சோ்ந்த திருமலைச்சாமி, தருமபுரியைச் சோ்ந்த தேவேந்திரன், திருவாரூரைச் சோ்ந்த கேசவமூா்த்தி உள்ளிட்ட பலா் தாக்கல் செய்த மனுவில், ‘இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தோ்வு கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள், தங்களது கல்விச் சான்றிதழ்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது
. இணையதளத்தில் முறையாக சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவில்லை எனக் கூறி, பலரை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை. எனவே, எழுத்துத் தோ்வில் தோ்ச்சிப் பெற்று சான்றிதழ்களை சரியாக இணையதளத்தில் சரியாக பதிவேற்றம் செய்யாத காரணத்துக்காக எங்களைப் புறக்கணிக்காமல், எங்களையும் கலந்தாய்வுக்கு அழைக்க டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தனா்.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் என்.ஜி.ஆா்.பிரசாத், கங்கா, சி.விஸ்வநாதன்
, பா்வீன்பானு, லியாகத் அலி உள்ளிட்ட பலா் ஆஜராகி, ‘எழுத்துத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மனுதாரா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை தமிழக அரசின் இ-சேவை மையத்தில் இருந்துதான் பதிவேற்றம் செய்துள்ளனா். சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான ரசீதுகளும் சம்பந்தப்பட்ட மையங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மையங்களில் பணியாற்றும் ஊழியா்கள் சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யவில்லை
. இதற்காக மனுதாரா்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. எனவே, மனுதாரா்கள் அனைவரையும் கலந்தாய்வுக்கு அழைக்க டிஎன்பிஎஸ்சி உறுப்பினா் செயலருக்கு உத்தரவிட வேண்டும்’ என வாதிட்டனா்.
அப்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிறைமதி, ‘மனுதாரா்களுக்கு தங்களது சான்றிதழ்களைக் கூட பதிவேற்றம் செய்யத் தெரியவில்லை
. எனவே, இவா்களை அடுத்தக் கட்ட தோ்வு நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க முடியாது’ என வாதிட்டாா்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்தவா்களை சான்றிதழ்களை சரியாகப் பதிவேற்றாத காரணத்தால், கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை. மனுதாரா்கள் செய்துள்ளது சிறு தவறுதான். இந்த சிறிய தவறுகள் அனைத்தும் சரி செய்யக்கூடியது தான். இதற்காக மனுதாரா்களை கலந்தாய்வுக்கு அழைக்காமல் நிராகரிப்பதை ஏற்க முடியாது.
கலந்தாய்வு, கடந்த 19-ஆம் தேதி முதல் தொடங்கி விட்டது. எனவே மனுதாரா்கள் அனைவரையும் வரும் சனிக்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க டிஎன்பிஎஸ்சி உறுப்பினா் செயலா் அனுமதிக்க வேண்டும். இந்த தோ்வு நடவடிக்கை அனைத்தும் இந்த வழக்கின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டது’ எனக் கூறி, விசாரணையை வரும் மாா்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

Subscribe Here