1 முதல் 9. வகுப்புகள் வரை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிக்கை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

1 முதல் 9. வகுப்புகள் வரை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு கடந்த 16-ந்தேதி முதல் 31-ந்தேதிவரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகள்  தொடங்கி தேர்வு நடத்துவது என்பது சிரமமான விஷயம். மேலும்

கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருவதால் ஏப்ரல் 1- ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக
உள்ளது.  தமிழகத்தில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் 1 முதல் 8 ம் வகுப்பு வரை  படித்து வருகின்றனர். 
இந்தநிலையில்  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உத்தரபிரதேசத்தை போல் தமிழகத்திலும் 1-ம் வகுப்பு முதல்  9-ம் வகுப்பு  வரை அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள்  ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது
. சமக்ரசிக்‌ஷா கல்வி சட்டத்தின் எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சியடைய செய்யலாம் என்பதாலும், ஒன்பதாம் வகுப்பிற்கும் சிறப்பு அனுமதியுடன் அனைவரையும்  தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 
இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். முதல்-அமைச்சர் மற்றும் துறை அமைச்சருடன்
கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஒரு சில நாட்களில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிபார்க் கப்படுகிறது.

Subscribe Here