சென்னை: வரும் 2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடுமுழுவதும் நடைபெற்றன.
இந்நிலையில் வரும் 2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தற்போது தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், அந்தப் பணியின்போது மொத்தம் 31 கேள்விகள் கேட்கப்படும் என்றும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.