கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை - மம்தா பானர்ஜி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை - மம்தா பானர்ஜி




கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும்

விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை 2,56,682 பேர் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில், 1,977 பேர் வீட்டிலேயே கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 6 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
. அம்மாநில சுகாதாரத் துறை அலுவலர் தெரிவித்ததன்படி, அங்கு இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்க அரசு அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்துள்ளது.
இதுகுறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“பொதுநலன் கருதி அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மதரசாக்கள், சிஷூ சிக்ஷா கேந்திரம் (எஸ்எஸ்கே),
மாத்யமிக் சிக்ஷா கேந்திரம் (எம்எஸ்கே) என அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 16, 2020 முதல் மார்ச் 31, 2020 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் பள்ளித் தேர்வுகளும் ரத்து செய்யப்படுகிறது. எனினும் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

Subscribe Here