மெட்ரிக்குலேசன் இயக்ககம் என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்படும் - அமைச்சர் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மெட்ரிக்குலேசன் இயக்ககம் என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்படும் - அமைச்சர்


சென்னை,
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, அதிமுக  ஆட்சியில் நியமிக்கப்பட்ட 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்,  நிரந்தரம் செய்யப்படாதது
குறித்து கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டதால்,  5 ஆசிரியர்கள்  மீது மேற்கொள்ளப்பட்ட 17பி நடவடிக்கையை திரும்பப் பெறுமாறு, எம்எல்ஏ பூங்கொடி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,

 திமுக ஆட்சிக்காலத்தில் தேவை இருந்ததால் ஆசிரியர்கள் உடனடியாக நிரந்தரம் செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது அதுபோன்ற சூழல் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும்,  உடனுக்குடன் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படுவதாக கூறிய அவர், மாணவர்கள்
இடைநிற்றல் தொடர்பாக தவறாக வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களை அடிப்படையாக கொண்டு பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார். 
இதனிடையே, மாணவர்கள் இடைநிற்றல் விவகாரம், மாணவர் சேர்க்கை புள்ளி விவரம் உள்ளிட்ட விஷயங்களில் குளறுபடிகளும், சர்ச்சைகளும் வெடித்ததன் காரணமாக, இந்த ஆண்டு ஆவண புத்தகத்தை, கல்வித்துறை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,  10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இனி பெற்றோரின் பெயரும் இடம் பெறும் என்றும், மெட்ரிக்குலேசன்  இயக்ககம் என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்படும்
என்றும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் நலனுக்காக பள்ளி பரிமாற்றத்திட்டம் கொண்டுவரபப்படும் என தெரிவித்தார். 
மேலும்  ஆசிரியரல்லாத பணியிடங்கள் இருப்பதை உறுதி செய்ய ஆசிரியரல்லாத பணியிடங்கள்
தோற்றுவிக்கப்படும் என  பள்ளிக்கல்வித்துறையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில்  வெளியிட்டார்.

Subscribe Here