சிறப்பு வகுப்பு, தனி வகுப்பு என்ற பெயரில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சிறப்பு வகுப்பு, தனி வகுப்பு என்ற பெயரில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை


சிறப்பு வகுப்பு, தனி வகுப்பு என்ற பெயரில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:
கொரோனா வைரஸ் தொற்று முன்எச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு, உள்ளதால் வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. பள்ளி குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லாமல் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு சிறு தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதாக பள்ளி கல்வித்துறைக்கு புகார் வந்துள்ளது. நோய் தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக மாணவர்கள்
பாதுகாப்பாக வீடுகளில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ள நிலையில் ஒரு சில பள்ளிகள் மாணவர்களை தனி வகுப்புகளுக்கு வரவழைத்துள்ளனர்.
இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-
மாணவர்கள் பாதுகாப்பாக வீடுகளில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை தனியார் பள்ளி நிர்வாகம் தவறாக பயன்படுத்தக்கூடாது.
சிறப்பு வகுப்பு, தனி வகுப்பு என்ற பெயரில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க கூடாது. அரசின் உத்தரவை மீறி செயல்பட்டால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத் தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் தவிர வேறு யாரையும் வரவழைக்கக்கூடாது. தொற்று நோய் எச்சரிக்கை சட்டத்தின் கீழ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe Here