*ஏன் விடுமுறை அளித்து கடையடைப்பு செய்து,பயணங்களை தவிர்த்து மக்களை வீட்டிலேயே இருக்க அரசு அறிவுறுத்துகிறது?..*
*இல்லை சார்.. அது தேவையேயில்லை..*
*ஏன் இவ்வளவு பதட்டம்?*
*இந்தியாவில் இதுவரை
100 கொரானா நோயாளிகள்தானே கண்டறியப்பட்டிருக்கின்றனர்..*
*இதெல்லாம் ஒரு பிரச்சனையா?*
*என்றெல்லாம் நினைக்காதிருங்கள்..*
*ஒவ்வொரு தேசத்திலும் 20 நாட்கள் இடைவெளியில் அது எவ்வளவு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள்..*
*இத்தாலியில் பிப்ரவரி 20 தேதியில் 4 தொற்றுகள் தான் இருந்தன..ஆனால் மார்ச் 10 ஆம் தேதி 10,149 ஆக மாறியிருக்கிறது*..
*ஈரானில் பிப்ரவரி 20 ஆம் தேதி வெறும் 5 தொற்றுகள் தான் இருந்தன.... ஆனால் மார்ச் 10 ஆம் தேதி அது 8042ஆக மாறி இருந்தது..*
*தென் கொரியாவில் பிப்ரவரி 20 ஆம் தேதி வெறும் 111 இல் இருந்து,
மார்ச் 10ஆம் தேதி 7513 ஆக மாறி இருந்தது..*
*ஸ்பெயினில் பிப்ரவரி 20ஆம் தேதி வெறும் இரண்டு தொற்றுகள் இருந்தன.*
*மார்ச் 10 ஆம் தேதி 1695 ஆக உயர்ந்து இருக்கிறது..*
*ப்ரான்சில் பிப்.20ம் தேதி 12 ஆக இருந்தது. மார்ச் 10இல் 1784 ஆக உயர்ந்தது*.
*ஜெர்மனியில் பிப்20இல் 16 ஆக இருந்தது.. மார்ச்10இல் 1565 ஆக உயர்ந்தது.*
*அமெரிக்காவில் 15 ஆக இருந்தது 994 ஆக உயர்ந்தது*
*பிரிட்டனில் 9 ஆக இருந்தது 383 ஆக உயர்ந்தது*
*சீனா தவிர்த்த மொத்த உலகத்தில் பிப்ரவரி 20 அன்று வெறும் 1212 தொற்றுகள் என்ற நிலையில் இருந்து மார்ச் 10ஆம் தேதி 38179 ஆக உயர்ந்தது*.
*இது முப்பது மடங்கு பாய்ச்சலாகும்*.
*இந்த புள்ளி விபரங்கள்தான் நமக்கான அலாரம்*
*இந்தியாவில் முதலில் ஒன்று என்ற எண்ணிக்கையில்
துவங்கிய கணக்கு ஒருசில நாளில் நூறைத் தொட்டிருக்கிறது*..
*இப்பொழுதுதான் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்..*
*பலரும் நினைக்கின்றார்கள்.. தமிழகத்தில் வெப்பநிலை அதிகம்.. இங்கு கொரானா பரவாது என்று..*
*இதைவிட அதிக வெப்பப் பிரதேசங்களில் கொரோனா அதிகப் பாய்ச்சல் பாய்ந்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.*.
*இந்த நோயின் அறிகுறிகள் 14 நாட்களில் வெளிப்படுகிறது*..
*எனவேதான் 15 நாட்கள் ஒவ்வொரு தேசமும் முழு Shut down யைக் கொண்டு வருகிறது..*
*காரணம்..*
*இது தொற்று நோய்.. ஒருவரிடத்திலிருந்து இன்னொருவருக்குப் பரவாமல் தடுக்க வேண்டும்..*
*அதுதான் மிக முக்கியம்
..*
*எல்லோரையும் ஒரு 15 தினங்கள் வீட்டில் ஒட்டு மொத்தமாக முடக்கி வைத்தால்.. ஒருவரிடம் இருந்து இன்னொரு வெளி நபருக்குப் பரவாது..*
*ஒரு வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நபர்களில் யாருக்கேனும் கொரானோ பாதிப்பு இருக்கும் என்றால், 14 நாட்களுக்குள் அதன் அறிகுறி வெளிப்பட்டு விடும்..*
*அவர்களை மட்டும் அடையாளம் கண்டு கொள்வதோ.. அவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதோ ஒரு அரசிற்கு மிகவும் எளிது..*
*ஆரம்ப நிலையில்.. நோயாளிகள் முழுஓய்வில் இருந்து, சாதாரண தடுப்பு மாத்திரைகள் (Antibiotic) எடுத்துக் கொள்வதுவும்.. சத்துள்ள ஆகாரத்தை எடுத்துக் கொள்வதுமே இந்தநோயைக் குணப்படுத்தப் போதுமானது..*
*அடுத்தடுத்த நிலைக்கு நோய் போகும் பொழுதுதான்..
அடுத்தடுத்த சிகிச்சை தேவைப்படும்..*
*சுவாசக் கோளாறுகள் அல்லது சுவாசத் திணறல் வரும் பொழுதுதான் அவசரச் சிகிச்சை உதவிகள் தேவைப்படும்..*
*அவர்களிலும்.. முதியோர்கள்.. நீரிழிவு நோயாளிகள் .. உயர் ரத்த அழுத்த நோயாளிகள்.. கர்ப்பிணிகள் ஆகியோர்களைத்தான் அதிகம் பாதிக்கும் என்பதால்.. அவர்கள் அதிகக் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்..*
*அவ்வளவே..*
*பயப்பட வேண்டியதில்லை..இந்த விழிப்புணர்வு ஜனங்களிடத்திலே இருக்க வேண்டும்..*
*இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு
ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் தலையாயக் கடமை..*
*தேவையற்ற.. உறுதிப்படுத்தப்படுத்தப்படாத .. எந்தத் தகவலையும், வதந்திகளையும் பரப்பாமலிருக்க வேண்டும்..*
*_அனைவருக்கும் பகிரவும்...அரசின் ஒவ்வொரு பாதுகாப்பு நடவடிக்கையிலும் நம் ஒத்துழைப்பு மிக..மிக அவசியம்.._*🙏