அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப சோதனை நடத்தப்படும் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப சோதனை நடத்தப்படும்



தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப சோதனை நடத்தப்படும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 150-ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


அதன் ஒரு பகுதியாக  மாநிலங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், மதுபான கடைகள் என அனைத்தும் இம்மாதம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா
பரவலை தடுப்பது தொடர்பாக  தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் இடம்பெற்றது பின்வருமாறு..


*தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப சோதனை
நடத்தப்படும்.

*அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படும்.

*தடுமன், காய்ச்சல், இருமல், மூச்சிறைப்பு உள்ள அரசு ஊழியர்கள், அலுவலகத்திற்கு வர வேண்டாம்.


*மூச்சிறைப்பு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுக வேண்டும்.

*அரசு ஊழியர்கள் சோப்பு போட்டு கைகழுவுவது
உள்ளிட்ட சுய சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

*அவசர, அவசியம் இருந்தால் தவிர பொதுமக்கள் அரசு அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

*அரசு அலுவலகங்களை
பொதுமக்கள் இ - மெயில், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.

*அரசு அலுவலகங்களில் எந்தவிதமான கூட்டங்களும் நடத்தக் கூடாது.

*கிளை அலுவலகங்களில் உள்ள ஊழியர்களை
தேவையின்றி தலைமை அலுவலகத்திற்கு அழைக்கக் கூடாது.

*அரசு அலுவலகம் வரும் பொதுமக்கள் யாருக்காவது கொரோனா இருந்தால் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்.

மேற்கண்டவை அனைத்தும் தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Subscribe Here