பொது தேர்வு எழுதும் மாணவர்களே உங்களுக்கான தன்னம்பிக்கை குறிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பொது தேர்வு எழுதும் மாணவர்களே உங்களுக்கான தன்னம்பிக்கை குறிப்பு


பாடங்களில், தங்களது மனதில் பதிந்த பாடங்களின் முக்கிய கருத்துக்களை சிறு குறிப்புக்களாக எழுதி அதன் பின்னர் மீண்டும், மனனம் செய்து பழகிக்கொள்ளுங்கள். 

முக்கியமான பாடங்களில், இருக்கின்ற முக்கிய கருத்துக்களை மட்டும் சுருக்கமாக குறித்துக் கொண்டு மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு தேர்வில் விரிவுபடுத்தி எழுதிக்கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். 

நீங்கள், உறங்க செல்வதற்கு முன்பாக ஒருமுறை தியானிப்பது போல மனதை அமைதியாக வைத்த்துக்கொண்டு , படித்த பாடங்களில் இருக்கின்ற முக்கிய குறிப்புகளையும், ஃபார்முலாக்களையும், வரைபடங்கள் பற்றியும் மனதில் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். 

மீண்டும், அதி காலையில் எழுந்தவுடன், இரவில் உறங்குவதற்கு முன் மனதில் நினைவுபடுத்திய பாடங்களையும், குறிப்புகளையும் மீண்டும் ஒரு முறை நிதானமாக நினைவுக்கு கொண்டு வாருங்கள். இந்த முறையில், அனைத்து பாடங்களுக்கும் நிச்சயமாக கையாளுங்கள். 

சகஜமாக இருங்கள். பதட்டம் என்கின்ற உணர்வினை விரட்டுங்கள். நீங்கள் சாதாரணமாக, உங்கள் பள்ளிக்கு எப்போது செல்வதை போலவே செல்வதற்கு தயார் ஆகுங்கள். தேர்விற்கு செல்வதற்கு முந்தைய நாளில், அடுத்த நாள் எடுத்து செல்ல வேண்டிய தேர்விற்கான நுழைவுச்சீட்டு, 

சரியான பழுதில்லாத எழுது பொருட்கள், பேருந்துக்கான பாஸ் இருந்தால் அதனையும் மறக்காமல் எடுத்து வைத்து தயார் செய்து கொள்ளுங்கள். படித்த கருத்துக்களை நீங்கள் வேறு ஒருவருக்கு கற்றுத்தர இருப்பதாக கருத்திக்கொள்ளுங்கள், 

உங்களுக்கு நீங்கள் கற்றது வாழ் நாள் முழுவதிலும் மறக்காது. தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பாக, நண்பர்களுடன் கேலி, கிண்டல், விளையாட்டு என்று இருக்காமல், அதே நேரத்தில் பரபரப்பு மற்றும் பதட்டம் போன்ற உணர்வுகள் மேலோங்குவதையும் தவிர்த்து விட்டு, 

பாடக்ங்களில் எடுத்தித்த அன்றைய தேர்விற்கு உரிய குறிப்புகளை நினைவுபடுத்திய நிலையில் அமைதியாகவும், இன்று நாம் இந்த தயிர்வில் ஒரு சாதனை நிகழ்த்த வேண்டும் என்கின்ற அமைதியான மற்றும் தெளிவான உறுயதியுடன், மனதை ஒருமுகப்படுத்துங்கள். 

மனதை அமைதிப்படுத்துங்கள். தெளிவான நீரோடை பாய்வது போல, தேர்வு அறைக்கு செல்லுங்கள். கேள்வித்தாளை பெற்று தெளிவாக ஐந்து நிமிடங்கள் ஒரு முறை படித்துப் பார்த்துவிட்டு, நீங்கள் எழுத இருக்கும் கேள்விகள் அனைத்தையும் தேர்வு செய்து பென்சிலால் குறித்துக் கொள்ளுங்கள். 

முதலில், நீண்ட வினாக்களை எழுத துவங்குங்கள். அதில், உங்களுக்கு மிகவும் நன்றாக, கற்றுத் தேர்ந்த பாடத்தின் கேள்விகளுக்கான பதில்களை எழுதிடத் துவங்குங்கள். முக்கியமான வாக்கியங்கள் அனைத்தையும், பென்சிலால் அடிக்கோள் இட்டுக்காட்டுங்கள். 

துணைத்தலைப்புகள் ( சப்-ஹெட்டிங் ) கொடுத்து எழுதுங்கள். அதனையும், அடிகோள் இடுங்கள். முக்கியமான தலைப்புகளுக்கு எண்ணிக்கை கொடுங்கள். முக்கியமான ஃபார்முலாக்களையும், அடிக்கோள் இடுங்கள். பதில் எழுதும் காகிதத்தில், உங்களது கணக்கீடுகளுக்கான இடம் ஒதுக்கி கணக்கிடுங்கள். 


அனைத்து தேர்வு செய்யப்பட கேள்விகளுக்கும், பதில் அளித்துவிட்டோம் என்று கவனித்துக் கொள்ளுங்கள். கேள்வித்தாளில் இருக்கும் கேள்விக்கான எண்களை மட்டும், அதற்கான பதில்களுக்கும் தாருங்கள்.

உதாரணமாக, முதலில் நீங்கள் நெடிய வினாவின் 2-ம் கேள்விக்கு, முதலில் பதில் அளித்தால், கேள்வி எண் 2 என்றே குறிப்பிடுங்கள். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தவுடன், அனைத்து பதில்களையும், மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள். 

அனைத்து தேவையான இடங்களிலும், உங்களது தேர்வு எண்ணை சரியாக குறிப்பிட்டு இருக்கின்றதை உறுதி செய்து கொள்ளுங்கள்.. விடைத்தாள்களை சரியாகவும், வரிசையாகவும் எண்ணிட்டு , வரிசைப்படி அடுக்கி, சரிபார்த்து அதன் பின்னர் நூலில் காட்டுங்கள்

Subscribe Here