வாடிக்கையாளர்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க தேவையில்லை என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் திருப்தியே எங்களுக்கு மிக
முக்கியம் என எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 44.51 கோடி வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பெருநகரங்களில் 5,000 ரூபாயும் மற்ற பகுதிகளில் 3,000 ரூபாய் வரையிலும் இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
அவ்வாறு இருப்பு தொகை வைத்திருக்க வில்லை என்றால், அந்த வாடிக்கையாளர்களிடம் அபராத தொகையை வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இருப்பு தொகை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்.. அதாவது சம்பளம் பெறும் நபர்கள் “சேலரி அக்கவுண்ட்” வைத்திருப்பது போலவே எஸ்பிஐ
வங்கியிலும் இனி ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டை வைத்துக்கொள்ள முடியும். நாட்டிலேயே அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது எஸ்பிஐ வங்கி தான் என்பதால், அதிக அளவிலான மக்கள் பயனடைவர்