திருநெல்வேலி:ஊரடங்கு காலத்திலும் தங்கள் தேவைகளை விரிவுபடுத்தாத மாஞ்சோலை எஸ்டேட் மக்கள் எப்போதும் போல வாழ்க்கை நடத்துகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைக்கு மேலே 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது மாஞ்சோலை எஸ்டேட். பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசனின் டீ எஸ்டே் 90 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறது. மாஞ்சோலை எஸ்டேட்டிற்கும் மேலே ஆயிரம் அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து , குதிரைவெட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. டீ எஸ்டேட்களில் 600 குடும்பங்கள் வசிக்கின்றன. வெயிலின் தாக்கமே தெரியாமல் தற்போது குளுகுளுவென ரம்மியமான சீசன் நிலவுகிறது.

திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்தில் இருந்து தினமும் இரண்டு அரசு மினி பஸ் சேவைகள் இயங்கிவந்தன.கொரோனா பாதிப்பினால் அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எஸ்டேட் மக்கள் அங்கு வழக்கம்போல பணிகளை மேற்கொள்கின்றனர்.காலை 5:00 மணிக்கே எழுவது, 7 மணிக்கு எஸ்டேட் செல்வது, மதியம் உணவுக்கு வருவது பின்னர் பணி, மாலையில் வீடு திரும்புதல் என வழக்கம்போல எந்த பாதிப்பும் இன்றி இருக்கின்றனர்.
‛அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் வந்து விடுகின்றன. பால் இல்லாமல் காபி, டீ குடித்து பழகி விட்டது. தேவைகள் அதிகம் இல்லாததால் எல்லாக் காலத்தையும் போலவே தற்போதும் உள்ளது’ இருப்பினும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ளனர். அவர்கள் எஸ்டேட்டிற்கு வரமுடியாதது கொஞ்சம் வருத்தம்தான் என்றார் அங்கு வசிக்கும் ராமலிங்கம்