பாராட்டுகிறார்கள்,கைதட்டுகிறார்கள்..ஆனால் 3 மாதமாக சம்பளம் இல்லையே... புலம்பும் மருத்துவர்கள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பாராட்டுகிறார்கள்,கைதட்டுகிறார்கள்..ஆனால் 3 மாதமாக சம்பளம் இல்லையே... புலம்பும் மருத்துவர்கள்


புதுடில்லி: டில்லி கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் ரெசிடென்ட் டாக்டர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
கொரோனா உலகையே மிரட்டி வரும் வேளையில் இந்தியாவிலும் பாதிப்பும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கள் உயிரை பணையம் வைத்து நாட்டில் லட்சக்கணக்கான டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டில்லி கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் ரெசிடென்ட் டாக்டர்களுக்கு கடந்த மார்ச் முதல் சம்பளம் வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை ரெசிடென்ட் டாக்டர்கள் சங்க தலைவர் குமார் கூறுகையில், ‘மார்ச், ஏப்ரல், மே, மாத சம்பளம் இன்னும் தரவில்லை. போராட்டத்தில் ஈடுபடுவதற்கான நேரமும் இது இல்லை. ஆனால், மொத்தமாக ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளோம். அந்த நேரத்தில் எங்கள் சேவை நிற்காது. வேறு ஏதாவது மருத்துவமனையில் பணிபுரிவோம்.
மக்கள் எங்களை பாராட்டுகிறார்கள், கைதட்டி ஊக்குவிக்கிறார்கள், வாரியர்ஸ் என்று புகழ்கிறார்கள், ஆனால் எங்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்க வில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஜூன் 16 ம் தேதிக்குள் சம்பளம் வழங்கவில்லை என்றால் நாங்கள் மொத்தமாக ராஜினாமா செய்து விடுவோம். சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் எங்கள் பிரச்னையை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டில்லியில் கஸ்தூர்பா மருத்துவமனை 450 படுக்கை வசதிகள் கொண்டது. இங்கு 1000 சீனியர் டாக்டர்கள், 500 ரெசிடென்ட் டாக்டர்கள், 1,500 செவிலியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Subscribe Here