மேற்கு வங்கத்தில் ஆக.,31 வரை ஊரடங்கை நீட்டிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மேற்கு வங்கத்தில் ஆக.,31 வரை ஊரடங்கை நீட்டிப்பு

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் ஆக.,31 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, வாரத்தில் 2 நாட்கள் மட்டும் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் துவங்கியதும், மார்ச், 25ம் தேதி முதல் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அது நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், கடந்த இரண்டு மாதங்களாக, பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு தளர்வின், இரண்டாம் கட்டம், 31ம் தேதியுடன் முடிய உள்ளது. தற்போதைய நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக, மாநில அரசுகளுடன், மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க அரசு, ஆக.,31 வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஆக., 1 முதல் 31ம் தேதி வரை வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், ஆக., 1ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால், அன்றைய தினம் ஊரடங்கு இருக்காது எனவும் அறிவித்துள்ளார்.

Subscribe Here