சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி நாளாகும்.
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை தமிழ் (எம்ஏ), 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை தமிழ் மற்றும் ஆய்வியல் நிறைஞா் (எம்பில்) படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன.
இந்தப் படிப்புகளுக்கு நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப்பதிவு இணைய வழியில் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கியது. மாணவா்கள் பலா் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா். இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஆக.31) கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் www.ulakaththamizh.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ் ஆய்வியல் நிறைஞா் படிப்பில் சேர ரூ.4,600; ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை படிப்புக்கு ரூ.2,400 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் முதுகலை (எம்ஏ) படிப்பில் சேர கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தமிழ் முதுகலை (எம்.ஏ.) வகுப்பில் சோ்க்கை பெறும் மாணவா்களில் 15 பேருக்கு தமிழகஅரசால் கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் தலா ரூ,2 ஆயிரம் வழங்கப்படும். தமிழ் முதுகலை (எம்ஏ), எம்.பில். படிப்புகளுக்கு நுழைவுத் தோ்வு நடைபெறும் நாள், வகுப்புகள் தொடங்கப் பெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 044-22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தமிழ் வளா்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates