எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்


சென்னை: எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கவுள்ளது. கரோனா பரவல் காரணமாக கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியிலான விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டுதோறும் நேரடியாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக மாணவா்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் முறையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை முதல்  www.gct.ac.in, www.tn.mbamca.com என்கிற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். எம்பிஏ, எம்சிஏ மாணவா் சோ்க்கை ‘டான்செட்’ நுழைவுத் தோ்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கட்-ஆஃப் முறைப்படி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவா் சோ்க்கை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe Here