புதுச்சேரி மாணவர்கள் 8-ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

புதுச்சேரி மாணவர்கள் 8-ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்

 


9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 8-ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தெரிவித்தார்.p>

புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி புதுவை, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கியுள்ளனர். ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 5-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

இதையொட்டி அன்றைய தினம் வகுப்பறைகளை சுத்தம் செய்வது கிருமிநாசினி தெளித்தல், சமூக இடைவெளியை கடைபிடித்து மாணவர்களை அமரச் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 8-ந் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களை சந்தித்து பாடங்களில் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

முன்பு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் தான் பள்ளிகள் செயல்பட்டன. தற்போது ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும். திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களை சந்தித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். மாணவர்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும்தான் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

தனியார் பள்ளிகள் முழு நேரம் வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை. இதனை கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடும். தனியார் பள்ளிகள் அரசின் விதிமுறைகளை மீறி வகுப்புகள் நடத்தினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளை முழுமையாக திறப்பது குறித்து மத்திய அரசின் வழpிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here