அண்ணா பதக்கம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அண்ணா பதக்கம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்



சென்னை: வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்“ பெற தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்“ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.

ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்)-க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். வீர, தீரச் செயல் புரியத தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். 

பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. 2021 ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள பதக்கத்திற்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீரச் செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ  
அரசு முதன்மைச் செயலாளர்,  பொதுத் துறை, 
தலைமைச் செயலகம், 
சென்னை-600 009
அவர்களுக்கு 14.12.2020-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். 

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு முதல்வரால் 26.01.2021 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here