தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்தா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம். - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்தா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.

 senkottaian


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்து செய்வது பற்றியும் முதல்வரிடம் கலந்தாலோசிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பு பற்றி அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது.


இதனையடுத்து இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த ஐந்து பேருக்கு உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் கொரோனா பரவும் சூழல் உருவாகி உள்ளதால், பள்ளிகள் திறப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் பொங்கலுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பள்ளிகள் திறக்கப்படுமா இல்லையா என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.


இந்நிலையில் பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா என்பது குறித்து முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு தாய்லாந்து மற்றும் அரையாண்டுதேர்வு வைத்து பெயர்ச்சி அறிவிக்கப்பட்டாலும் இந்த ஆண்டு நிலமை வேறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here