யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் நிலப்பரப்பு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மாறுபட்ட ஒன்று. காரைக்கால், ஏனாம், மாஹே உள்ளிட்ட பிராந்தியங்கள் நீங்கலாக சுமார் 293 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களை உரசிக்கொண்டு அமைந்திருக்கிறது புதுச்சேரி. நகரிலிருந்து கிராமப்புறங்களுக்கு செல்ல வேண்டுமென்றாலும் தமிழகப்பகுதிகளை கடந்துதான் ஆகவேண்டும். குறிப்பாக கிராமப்புற சாலைகளின் ஒருபகுதி புதுச்சேரியாகவும், மறுபகுதி தமிழகமாகவும் அமைந்திருக்கிறது.
மணிகண்டன்
பல இடங்களில் தமிழகப் பகுதிகளில் அமைந்திருக்கும் வீடுகளுக்கு இன்றளவும் புதுச்சேரி அரசின் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகள் இருக்கின்றன. ஒருசில கிராமங்களின் ஒரு பகுதி புதுச்சேரியிலும், மறுபகுதி தமிழகத்திலும் அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கிராமம்தான் புராணசிங்குபாளையம். அந்த கிராமத்தின் தமிழகப் பகுதியில் வசித்துவருகிறார் விவசாயக் கூலியான ரகுபதியின் மகன் மணிகண்டன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக