கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை தொடக்கம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை தொடக்கம்

 


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 1-ஆம் வகுப்பில் சேர்வதற்கான இணையதள பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் நேரடியாகச் சென்று பதிவு செய்யலாம்.ஒன்றாம் வகுப்புக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி மாலை 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்ட் செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம்.

இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு 08.04.2021 காலை 8 மணி முதல் 15.04.2021 மாலை 4 மணி வரை இடங்களின் அடிப்படையில் பதிவு நடைபெறும்.

2021-22 ஆம் ஆண்டுக்கான அட்டவணையின் படி https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தில் 11-ஆம் வகுப்பில் சேர்வதற்கான படிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்போது நாடு முழுவதும் 1247 பள்ளிகள் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here