உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா.. இந்தியாவில் தினசரி பாதிப்பு புதிய உச்சம்.. 4 லட்சத்தை கடந்தது! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா.. இந்தியாவில் தினசரி பாதிப்பு புதிய உச்சம்.. 4 லட்சத்தை கடந்தது!


வாஷிங்டன்: உலகளவில் கொரோனா பாதிப்பு 151,991,828 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து உலகளவில் முதலிடம் பிடித்து தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இந்தியாவில் 4,02,110 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,522 பேர் கொரோ னாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதிக தொற்று பாதிப்பில் 2-ம் இடத்தில் உள்ள பிரேசிலில் 73,076 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 2,870 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா விஸ்வரூபம்உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் கொரோனா தொடர்ந்து போட்டு தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 151,991,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 3,193,050 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 129,860,707 பேர் குணமடைந்துள்ளனர்.அமெரிக்காவில் குறைகிறதுஅமெரிக்காவில் கொரோனா முன்பை விட குறைந்து வருகிறது. அங்கு 58,316 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 755 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக வருகிறது. அங்கு ஒரே நாளில் 73,076 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,870 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.இந்தியாவில் உச்சம்இந்தியாவிலும் கொரோனா தொடர்ந்து அடங்காமல் ஆட்டம் போட்டு வருகிறது. உலகளவில் கொரோனா தினசரி பாதிப்பில், உயிரிழப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உச்சபட்ச அளவாக 4,02,110 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று பாதிப்பு ஒரேநாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவால் மேலும் 3,522 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3,272,256 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இந்தியாவில் இதுவரை 19,157,094 பேர் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை மொத்தம் 211,835 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் தொற்று வெகுவாக குறைந்துள்ளது. அங்கு 2,381 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் மேலும் 15 பேர் பலியாகியுள்ளனர்.பிரான்ஸ் பாதிப்புபிரான்சில் 24,299 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 276 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 13,446 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவால் மேலும் 268 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 8,731 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவுக்கு 397 பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 12,845 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 12,845 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. அங்கு மேலும் 31,891 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 394 பேர் பலியாகியுள்ளனர்.'! (?)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here