சென்னை: 12ஆம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத வருவதில் சிக்கல் உள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். நீட் தேர்வு மற்றும் சிறப்பு வகுப்பு தொடர்பாக எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை! நீட் தேர்வுக்கு விலக்கு குறித்து முடிவு எடுக்கப்பட்ட பின்னரே தேர்வு குறித்து விவாதிக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவ தொடங்கியதால் பிளஸ் 2 தவிர அனைத்து பள்ளி மாணவர்களும் 2019-20ஆம் கல்வியாண்டில் ஆல் பாஸ் ஆனார்கள். 2020-21ஆம் கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்ட போதிலும் இதனால் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் முழுமையான பலன் பெறவில்லை.தனியார் பள்ளிகள் மட்டுமே முறைப்படி ஆன்லைன் வகுப்புகளை நடத்தின. அரசு பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. 1 முதல் பிளஸ் 1 வரை அனைவருக்கும் ஆல்பாஸ் போடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் தனியார் பள்ளி மாணவர்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்தல் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உயர் கல்வித்துறை (கூடுதல்) செயலாளர் அபூர்வா , அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி ஆகியோர் பங்கேற்றனர். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 12ஆம்வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்த வேண்டும் என்பது தொடர்பாக அனைத்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், மாணவர்களின் எதிர்காலம் முக்கியம் என்றாலும் கூட மாணவர்கள் உடல் நலம் அதைவிட முக்கியமானது என்பதால் நன்று ஆலோசித்து மட்டுமே எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய பின்பு அவரின் ஆலோசனைப்படி முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.12ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத வருவதில் சிக்கல் உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு வந்தாலும் கூட அதனால் வீட்டில் உள்ளவர்களையும், மற்ற மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக மற்ற மாநிலங்களில் எப்படி பட்ட நிலை கையாளப்பட்டுள்ளது என்பதை ஆராய செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். நீட் தேர்வு மற்றும் சிறப்பு வகுப்பு தொடர்பாக எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை! நீட் தேர்வுக்கு விலக்கு குறித்து முடிவு எடுக்கப்பட்ட பின்னரே தேர்வு குறித்து விவாதிக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.பள்ளி கட்டமைப்பு என்பது நகர்ப்புறங்களில் ஒரு மாதிரியாகும், கிராம புறங்களில் ஒரு மதிரியாகவும் உள்ளது.அதன் சீர்திருத்தம் குறித்தும் கொரோனா காலங்களில் எப்படிப்பட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனபது தொடர்பான ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக