நேற்று 21, இன்று 8 ஐஏஎஸ் அதிகாரிகள்.. அதிரடி பணியிடமாற்றம்.. கைத்தறி துறை செயலாளராகிறார் பீலா ராஜேஷ் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நேற்று 21, இன்று 8 ஐஏஎஸ் அதிகாரிகள்.. அதிரடி பணியிடமாற்றம்.. கைத்தறி துறை செயலாளராகிறார் பீலா ராஜேஷ்

 


தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கைத்தறித்துறை செயலராக பீலா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழக அரசு இன்று அதிரடியாக 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறை செயலாளராக பதவி வகித்தவர் பீலா ராஜேஷ். அப்போது மாலை நேர கொரோனா புள்ளி விவர பேட்டிகளால் ஃபேமஸ் ஆனார்.ஆனால் பிறகு ராதாகிருஷ்ணன் அந்த பதவிக்கு கொண்டுவரப்பட்டார். பீலா ராஜேஷ் தற்போது கைத்தறித் துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.8 அதிகாரிகள் மாற்றம்இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை கூடுதல் தலைமை செயலாளராக பதவி வகித்த விக்ரம் கபூர், திட்டம் மற்றும் மேம்பாட்டு துறைக்கான கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். சிறு மற்றும் குறு தொழில் துறை முதன்மை செயலாளராக பதவி வகித்து வரும் மங்கத் ராம் சர்மா, நீர்ப்பாசன விவசாயத் துறை மற்றும் மேலாண்மைக்கான முதன்மை செயலாளராக பணி இடமாற்றம் செய்யப்படுகிறார்.பீலா ராஜேஷ் பணியிடமாற்றம்வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் பதவி வகித்து வரும் பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் நெசவு துறைக்கான முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர் பதவிக்கு மாற்றப்படுகிறார். தமிழ்நாடு தொழில் முதலீடுகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக பதவி வகிக்கும் சிகி தாமஸ் வைத்தியன் தொழில்துறை வணிகம் துறை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தலைவராக நியமிக்கப்படுகிறார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழக மின் நிதி கழகத்தின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.நிர்வாக சீர்திருத்தம்டான்ஜெட்கோவின், மேலாண் இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால், தமிழக தொழில் வளர்ச்சி கழக தலைவராக நியமிக்கப்படுகிறார். நிர்வாக சீர்திருத்த துறை முதன்மைச் செயலாளர் ஸ்வர்னா தமிழக ஊரக கட்டமைப்பு நிதி சேவை முதன்மைச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படுகிறார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here