கொரோனாவால் இறந்த அரசு ஊழியருக்கு ரூ.25 லட்சம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்க வேண்டியவை குறித்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கடிதம். - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கொரோனாவால் இறந்த அரசு ஊழியருக்கு ரூ.25 லட்சம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்க வேண்டியவை குறித்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கடிதம்.

 


IMG_20210529_212015
ஊரக வளர்ச்சி ( ம ) ஊராட்சி துறையில் கொரோனா நோய் தடுப்பு பணியில் முன்களப்பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட்டு , உயிரிழந்தவர்களது குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் நிவாரண நிதியினை பெற்று தருவதற்கு அரசுக்கு முன் மொழிவு அனுப்பிட ஏதுவாக பின்வரும் ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் முன்மொழிவினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேலும் , கொரோனா நோய்தடுப்புப் பணிக்கு ஈடுபடுத்தப்பட்ட அலுவலர்கள் பணியின்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக மரணமுற்றிருப்பின் ( இவர்கள் நோய் தொற்றாளராக இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை ) அவர்களது குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க முன்மொழிவு அனுப்பிட வேண்டும்.
1. கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் முன்களப்பணியாளராக பணிபுரிய பிறப்பிக்கப்பட்ட செயல்முறை ஆணையின் நகல் மற்றும் அச்செயல்முறைகளுக்கேற்ப கொரோனா நோய்தடுப்புப் பணியில் பணிபுரிந்ததற்கான சான்று.

2. கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதற்கான மருத்துவ பரிசோதனை சான்று 

3. இறப்பு சான்று நகல் . ( கொரோனா நோய் பாதிப்பு என குறிப்பிட்டிருக்க வேண்டும் )

4. வாரிசு சான்று நகல்

5. குடும்ப அட்டை நகல்

6. கொரோனா நோய் தொற்று பணியின்போது விபத்து நேரிட்டது என்பதற்கான சான்று மற்றும் விபத்து தொடர்பான முதல் தகவல் அறிக்கையின் நகல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here