சென்னை: மத்திய அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என்றும் கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக நான்கு லட்சம் வரை சென்றது.ஜுன் 3... கருணாநிதி பிறந்த நாளில் கரம் கோர்க்கும் மு.க.ஸ்டாலின் - மு.க. அழகிரி? தடபுடல் ஏற்பாடுகள்? முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையின் பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக வழக்கமாக நடைபெறும் பல்வேறு பணிகளும், நடவடிக்கைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.கொரோனா 2ஆம் அலைஅதன்படி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைபெறவிருந்த ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 10 வகுப்புத் தேர்வு பெரும்பாலான மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டன, +2 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதுதவிர நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது மாணவர்கள் ஏற்கனவே மன அழுத்தத்தில் உள்ளதால் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என ஒரு தரப்பினரும், தேர்வுகளை ரத்த செய்தால் மாணவர் சேர்க்கையில் சிக்கல் எழும் என மற்றொரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.+2 தேர்வுகள்இதனால் நாட்டில் +2 தேர்வுகளை நடத்துவது குறித்து முடிவெடுக்க இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.ஆலோசனைக் கூட்டம்காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, " இந்த கூட்டத்தில் சிபிஎஸ்சி மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வு எப்படி நடத்தலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.கண்டிப்பாக +2 தேர்வுகள் நடைபெறும்தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் எப்போது கொரோனா பாதிப்பு குறைகிறதோ, அப்போது இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். நாட்டிலுள்ள பெரும்பாலான மாநிலங்கள் +2 தேர்வுகளை நடத்தவே விருப்பம் தெரிவித்துள்ளன. அதேபோல தமிழகத்திலும் +2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும். அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.இறுதி முடிவுஆனாலும், தற்போது கொரோனா உச்சத்தில் உள்ளது. எனவே குழந்தைகளின் நலனைக் பாதுகாப்பதும் எங்களின் கடமைதான். கொரோனா பாதிப்பு எப்போது குறைக்கிறதோ, அப்போது பொதுத்தேர்வை நடத்துவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். தமிழகத்தின் இறுதி நிலைப்பாடு குறித்து வரும் செவ்வாய்க்கிழமைக்குள் மின்னஞ்சல் மூலம் மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக