சென்னை: கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு, புதிதாக ஒரு, வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மருத்துவத் துறை நிபுணர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.தமிழக அரசு கடந்த வாரம் ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில்தான் நேற்று புதிதாக ஒரு வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.கடந்த முறை வெளியிட்ட நெறிமுறையில் நான்கு வகையாக நோய் பாதிப்பு பிரித்து சொல்லப்பட்டிருந்தது. இந்த முறை அது மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது.வீட்டு தனிமையில் இருப்பவர்கள் பராமரிப்பு மையங்களில் இருப்பவர்கள் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுபவர்கள் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வகையினரும் எந்த மாதிரி சிகிச்சை பெற வேண்டும் என்பது பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உடலில் ஆக்சிஜன் அளவு 94 சதவீதம் மற்றும் அதற்கு மேல் இருந்தாலோ, ஒரு நிமிடத்திற்கு 24 முறைக்கு குறைவாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட முடியும் என்றாலோ, வீட்டிலிருந்து சிகிச்சை பெறலாம். வைட்டமின் சி 500 எம்ஜி ஐந்து நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும், ஜிங் மாத்திரைகளை 5 நாட்கள் எடுக்க வேண்டும். காய்ச்சல் மருந்து 500 எம்ஜி ஒரு நாளைக்கு நான்கு முறை எடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே உடலில் இருக்கக்கூடிய இணை நோய்களுக்கு மருந்து சாப்பிட வேண்டும், நன்கு தண்ணீர் குடிக்க வேண்டும், குப்புறபடுத்துக் கொள்வது, அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஆக்சிஜன் அளவு 90 மற்றும் 94க்கு இடைப்பட்ட அளவுக்கு இருந்தாலோ, ஒரு நிமிடத்திற்கு 24 முதல் 30 வரை மூச்சு விடத் தேவையிருந்தாலோ, கொரோனா பராமரிப்பு மையங்களில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். 90 சதவீதத்திற்கும் குறைவாக ஆக்சிஜன் அளவு இருப்பவர்கள், மற்றும் ஒரு நிமிடத்திற்கு 30 முறைக்கு மேலே மூச்சு விட தேவையுள்ளவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நோயாளிகள், 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு 3 நாட்களுக்குமாத்திரை கொடுக்க முந்தைய பரிந்துரையில் இருந்தது. அந்த மாத்திரை செயல் திறன் குறித்து மருத்துவ நிபுணர்கள் மாறுபட்ட கருத்து கூறியதால், இப்போது அந்த மாத்திரை நீக்கப்பட்டுள்ளது. ஆனால், இது வைரஸ்க்கு எதிரான மருந்து என்பதால் நீக்கியிருக்க கூடாது என சில மருத்துவர்கள் கூறுகிறார்கள். பல மருத்துவர்களோ, இது நிரூபிக்கப்படாத மருந்து என்பதால் தமிழக அரசு எடுத்த முடிவு சரியானது என்று வரவேற்பு தெரிவிக்கிறார்கள்.இந்த வழிகாட்டு நெறிமுறையில், ரெம்டெசிவிர், ஹைட்ரோக்சிகுளோரோகுயின், பிளாஸ்மா சிகிச்சை போன்றவையும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.-
Post Top Ad
Home
corona
3 வகை கொரோனா நோயாளிகள்.. சிகிச்சை முறைகள் என்ன? தமிழக அரசின் வழிகாட்டுதல்.. டாக்டர்கள் வரவேற்பு

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Subscribe Here
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக