Http://www.asiriyarmalar.com
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 475 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் சென்னையை கோவை முந்தியுள்ளது.முழு ஊரடங்குகொரோனாவை தடுக்க தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Http://www.asiriyarmalar.com மருந்து, பால் கடைகள் தவிர மளிகை, காய்கறி கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உயிழப்பு எண்ணிக்கைஇதனால் மொத்த பாதிப்பு 19,45,260 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 475 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 98 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 21815 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 29,717பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 16,13,221 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்சென்னையில்குறைந்தது3,10,224 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,62,518 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,62,38,649 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 3561பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு அச்சுறுத்தி வருகிறது. சென்னையை விட கோவையில் பாதிப்பு அதிகரித்துள்ளது.கோவை முதலிடம்கோவையில் மட்டும் 4268 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 1302 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 909 பேருக்கும், மதுரையில் 1538 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 1116 பேருக்கும், திருவள்ளூரில் 1181 பேருக்கும், திருச்சியில் 1775 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 1880 பேருக்கும், விருதுநகரில் 1198 பேருக்கும், ஈரோட்டில் 1642 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக