சென்னை : இந்தியாவிலேயே ரெம்டெசிவிர் மருந்தை நோயாளிகள் உறவினர்களுக்கு கொடுத்து வந்தது தமிழகம் மட்டும் தான். இந்த சூழலில் ரெம்டெசிவிர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கே நேரடியாக விற்பனை செய்து அவர்கள் மூலம் நோயாளிகளுக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இணைதளத்தில் பதிவு செய்யும் முறை கொண்டுவரப்படுகிறது.தமிழகத்தில் தற்போது அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டசிவிர் மருந்து தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் மூலம் வழங்கப்படுகிறது.தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும், சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் அரசு விற்பனை செய்து வருகிறது. இந்தமருந்தை நோயாளிகளின் உறவினர்கள் நேரடியாக மருந்தை பெற்று வந்தார்கள்.காலை முதல் மாலை வரை மருந்து வாங்க தினசரி பல்லாயிரம் பேர் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லையில் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர். மருந்து வாங்க வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால், நிலைமை இன்னமும் மோசமாகும் என்றும், இந்த முறையை அரசு உடனே மாற்றி மருத்துவமனைகளுக்கே மருந்தை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.ஸ்டாலின் அதிரடிஇது தொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் முக ஸ்டாலின், இனி மருந்துகளை மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரத்தில் மிகவும் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இணையதள பதிவு முறையை கொண்டுவர உத்தரவிட்டுள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்,தனியார் மருத்துவமனைகள்அதென்ன இணையதள பதிவு முறை, என்றால் வருகிற 18.05.2021 முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவிட வேண்டும். மேலும் அவர்களில் யாருக்கெல்லாம் மருந்து தேவை என்பது குறித்த கோரிக்கையையும் அரசின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். அரசு இதற்ககென் இணையதள வசதியை இந்த இரண்டு நாளில் உருவாக்க உள்ளது.யாருக்கு தருவார்கள்இந்த வெளிப்படைத்தன்மை காரணமாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எத்தனை பேர், அவர்களில் யாருக்கெல்லாம் மருந்து தேவை என்பதை எளிதாக அரசால் அறிய முடியும். மருத்துவமனைகளின் கோரிக்கைகளை பரிசிலீத்து அரசு ரெம்டெசிவிர் மருந்தை இனி ஒதுக்கீடு செய்யும். அந்த மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் மட்டும் வந்து இனி மருந்துகளை வாங்கி செல்வார்கள். அதை தொடர்ந்து அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் மருந்தை மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ளலாம்.கண்காணிக்கவும் முடிவுஇந்த முறையில் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என்பதால் பலரும் வாங்கிவைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்ய முடியாது. மேலும் மருத்துவமனைகள் யார் யாருக்காக மருந்து வேண்டும் என்று சொல்லி வாங்கினார்களோ அவர்களுக்கே அளிக்க வேண்டியது வரும். தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு வாங்கிய மருந்தை அவர்களுக்கே அளிக்கின்றனவா என்பதை கண்காணிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி செயல்பட்டால் இனி நடவடிககை பாயும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. இதன் காரணாக ரெம்டெசிவிர் மருநது விற்பனையில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ' '.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக