திருச்சி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையானது குலக் கல்வி மற்றும் மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது; ஆகையால் புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.புதிய கல்வி கொள்கை தொடர்பாக மாநில கல்வி துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்கவில்லை.இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:பங்கேற்பு இல்லை ஏன்?மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலின் ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்திருக்கிறது என்பதைவிட பங்கேற்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். புதிய கல்வி கொள்கை தொடர்பாக மாநில அமைச்சர்களின் கருத்தை கேட்க வேண்டும் என மத்திய அரசுக்க் இ மெயில் மூலம் கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால் மத்திய அரசு எந்த ஒரு பதிலையும் தெரிவிக்கவில்லை. அதனால் இன்றைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.குலக் கல்வி திணிப்புபுதிய கல்வி கொள்கை தொடர்பான திமுகவின் நிலைப்பாடு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குலக் கல்வி திட்டத்தை மறைமுகமாக என்பதைவிட நேரடியாகவே திணிக்கிறது.மும்மொழிக் கொள்கை திணிப்புஅதேபோல் இருமொழிக் கொள்கையை ஒழித்து மும்மொழிக் கொள்கையையும் இந்த புதிய கல்விக் கொள்கை திணிக்கிறது. குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும். இடஒதுக்கீடு தொடர்பாக புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடவும் இல்லை.கல்வி கொள்கை திருத்தம் தேவைமறைமுகமாக இந்தி, சமஸ்கிருதத்தை புதிய கல்வி கொள்கை மூலம் மத்திய அரசு திணிக்க முயற்சிக்கிறது. புதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.'.
Post Top Ad
Home
அமைச்சர்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் தேவை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு- அன்பில் மகேஷ்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Subscribe Here
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக