கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ரூ 5 இலட்சம் வைப்புத்தொகை வழங்கப்படும் அறிவிப்பு செய்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் பாராட்டு.
புதுக்கோட்டை,ஜீன்.1 :
கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ரூ 5 இலட்சம் வைப்புத்தொகை வழங்கப்படும் அறிவிப்பு செய்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கொரோனா நோய் தொற்று தற்பொழுது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.அதை தமிழக முதல்வர் சவாலாக எடுத்து பாதிப்பைக் குறைக்க ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அவரின் முயற்சியால் தற்பொழுது கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் உள்ளது.எனவே தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கொரோனா நோய் தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் ரூ 5 இலட்சம் வைப்பீடு செய்யப்படும்.அந்த குழந்தைகளின் பள்ளி,கல்லூரிகளுக்கான செலவுத் தொகையை அரசே ஏற்றுக் கொள்ளும் என்ற தமிழக அரசின் முடிவை வாழ்த்தி பாராட்டி மகிழ்கிறோம்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்து உண்மையான செய்திகளை சேகரித்து வெளியிடும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரியும் அரசு அங்கீகார அட்டை பெற்ற செய்தியாளர்கள் அப்பணியின் போது வைரஸ் நோய் தற்கால உயிரிழக்க நேரிட்டால் அவர்களது வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ 5 இலட்சம் ரூ 10 இலட்சமாக உயர்த்தி ஆணை வழங்கிய தமிழக முதல்வரை வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம்.
ஒவ வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத் தொகை ரூ 4000 ஆயிரம் வழங்கப்படும்,ஆவின் பால் விலை லிட்டருக கு ரூ.3 குறைக்கப்படும்.நகரப் பேருந்துகளில் மகளிர்கள் இலவசமாக பயணிக்கலாம்.100 நாட்களில் மக்களிடையே பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் செயல்படுத்தப படும்.முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் .என பல்வேறு அரசாணைகளை வெளியிட்டு அதனை நடைமுறை படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு பாராட்டுக்கள்.
மாணவர்களின் நலன் கருதி மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள. ,மெட்ரிக் குலேசன. பள்ளிகள்,சுய நிதிப்பள்ளிகளில் 1 முதல் 8 வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பினை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி.மேலும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றமானது தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் என்றும் உறுதுணையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக