அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை உயர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கேட்டபோது, ‘‘குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியே பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
நடப்பாண்டில் மாணவர்கள் அதிகம் சேரும் பள்ளிகளைக் கணக்கெடுத்து, அதற்கேற்ப தேவைப்படும் கூடுதல் ஆசிரியர்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளின் விவரங்களை தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தரும் அறிக்கையின்படி பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் நிச்சயம் ஏற்படுத்தி தரப்படும்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக