அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்றவுடன் தனியார்துறை வேலையில் சேரக்கூடாது :ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் அதிரடி உத்தரவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்றவுடன் தனியார்துறை வேலையில் சேரக்கூடாது :ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் அதிரடி உத்தரவு


1622769887147499

அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்றவுடனே தனியார்துறை வேலையில் சேரக்கூடாது என்றும் குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மத்திய அரசு துறைகளின் செயலாளர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில், ஓய்வு பெற்ற பிறகு தனியார் வேலையில் சேருவதற்கு ஒவ்வொரு அரசுத்துறையும் குறிப்பிட்ட கால இடைவெளியை நிர்ணயித்துள்ளதாகவும், அந்த கால இடைவெளியை பின்பற்றாமல், உடனடியாக தனியார் வேலையில் சேருவது தவறான நடத்தை ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அப்படி தனியார் பணியில் சேருவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஊழல் வழக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்த தடையில்லா சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here