SBI வங்கியில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள் என்னென்ன? முழு விபரம்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

SBI வங்கியில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள் என்னென்ன? முழு விபரம்!

 


.com/

ஏ.டி.எம்., அல்லது தங்களது கிளைகளில் இருந்து மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால், சேவை கட்டணம் விதிக்கப்படும் என, எஸ்.பி.ஐ., எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண முறை நாளை  முதல் அமலுக்கு வருகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்.,கள் அல்லது கிளைகளில் மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஐந்தாவது பரிவர்த்தனை முதல், சேவை கட்டணமாக, 15 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படும். வாடிக்கையாளர்கள் 10 பக்கங்கள் அடங்கிய காசோலை புத்தகத்தை பெற, 40 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். 25 பக்கங்கள் அடங்கிய காசோலை புத்தகம் தேவைப்பட்டால், 75 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.மூத்த குடிமக்களுக்கு காசோலை புத்தகத்திற்கான புதிய சேவை கட்டண விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண முறை, நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here