பிளஸ் 2 துணைத்தேர்வு.. ஆகஸ்டு 6 முதல் 19 வரை நடைபெறும்.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம் -தமிழ்நாடு அரசு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பிளஸ் 2 துணைத்தேர்வு.. ஆகஸ்டு 6 முதல் 19 வரை நடைபெறும்.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம் -தமிழ்நாடு அரசு

 


சென்னை: பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்களுக்கு ஆகஸ்டு 6-ம் தேதி முதல் ஆகஸ்டு 19-ம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததால் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் தேர்ச்சி வழங்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.புதையல் ஆசை.. ஜோதிடர் பேச்சை நம்பி.. வீட்டுக்குள் 20 அடி குழி தோண்டிய கும்பல்.. 3 பேரை அள்ளிய போலீஸ் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக் கிடப்பட்டு தேர்ச்சி முறை அறிவிக்கப்பட்டது..மதிப்பெண் பட்டியல்இதனை தொடர்ந்து ...., .... ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டனர். தற்போதைய மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாமல் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ் 2 துணைத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே கூறி இருந்தது.துணைத் தேர்வு தேதி அறிவிப்புஇந்த நிலையில் பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்களுக்கு ஆகஸ்டு 6-ம் தேதி முதல் ஆகஸ்டு 19-ம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு நாளை முதல் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.கட்டுப்பாடுகள் என்ன?இது தொடர்பாக அரசு தேர்வு இயக்ககம் மேலும் கூறி இருப்பதாவது:- பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மாவட்ட வாரியாக அரசு தேர்வுத்துறை சேவை மையம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.அட்டவணை வெளியீடுதற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானதாகும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான அட்டவணையையும் அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் பலர் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here