நாட்டில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 31,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 118 நாட்களில் குறைவான பாதிப்பு.மகாராஷ்டிராவில் 7603 பேர் பாதிப்பு!உலக நாடுகளில் அதிகரிப்புஅதேநேரத்தில் இந்தியாவின் ஒருநாள் பாதிப்புக்கு இணையாக உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டது என கூறப்படுகிறது. இந்தியாவிலும் கடந்த 4-ந் தேதியே கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில்இந்த நிலையில் மகாராஷ்டிராவில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் கடந்த 10 நாட்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜூலை 2-ந் தேதி முதல் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 8 ஆயிரத்தை தாண்டியதாகவே இருக்கிறது. ஜூன் மாதத்தில் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஏற்பட்டிருக்கிற இந்த மாற்றம் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதா? என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா மரணங்கள் கூடுகிறதுமேலும் மகாராஷ்டிராவின் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் கடந்த 10 நாட்களில் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஜூலை 1-ந் தேதி ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 334 ஆக இருந்தது. இது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த 8-ந் தேதி முதல் ஒருநாள் மரணங்கள் எண்ணிக்கை கடந்த 10-ந் தேதி முதல் 400- ஐ தாண்டியதாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.கேரளாவில் குறைகிறதுநாட்டில் கேரளா தொடர்ந்து கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் கேரளாவில் கொரோனா பாதிப்பு, மரணங்கள் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.,
Post Top Ad
Home
corona
CPS
கொரோனா 3-வது அலை? மகாராஷ்டிராவில் 10 நாட்களாக கொரோனா பாதிப்பு, மரணங்களில் திடீர் அதிகரிப்பு
கொரோனா 3-வது அலை? மகாராஷ்டிராவில் 10 நாட்களாக கொரோனா பாதிப்பு, மரணங்களில் திடீர் அதிகரிப்பு
Tags
# corona
# CPS

About ASIRIYARMALAR
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
Newer Article
TET, TRB உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் பணிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்
Older Article
அரசு பள்ளி ஆசிரியர்கள் மறுப்பு கலெக்டர், கமிஷனரிடம் புகார்
CPS ACCOUNT SLIP 2020-21 ல் missing credit இருப்பின். சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் இணையத்தில் பதிவு செய்திட வேண்டும்
பிடித்தம் செய்த CPS ஓய்வூதியத்தொகை ரூ.60 ஆயிரம் கோடி எங்கே?
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது நிறைவேற்றப்படும்? - பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தகவல்!
புதிய ஓய்வூதிய விதிகளால் மிகுந்த மனஉளைச்சல் : அரசு ஊழியர்கள் பிரதமருக்கு கடிதம்
போக்குவரத்து ஊழியர்களுக்கு CPS திட்டம் ரத்து செய்து பழைய ஒய்வூதியதிட்டம் அமல்படுத்த விபரம் கேட்கப்பட்ட ஆணை திரும்பப் பெறப்பட்டது.
உலகின் சில பகுதிகளில்.. கொரோனா 3ஆம் அலைக்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டன.. மத்திய அரசு வார்னிங்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக