நீங்கள் காலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்களை வரவழைக்கிறீர்கள் என்று அர்த்தம் !!​ - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நீங்கள் காலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்களை வரவழைக்கிறீர்கள் என்று அர்த்தம் !!​

 



காலை உணவை தடுப்பதால் உண்டாகும் பிரச்சனைகள்.  காலை உணவு மிக முக்கியத் தேவை என பலரும் பலவிதமாக சொல்லியாயிற்று. 


ஆனால் வேலை, படிப்பு என அவசர கதியில் சாப்பிடாமலே செல்பரகள் ஏராளம். அவ்வாறு சாப்பிடாமல் இருப்பவர்களுக்குக்குதான் கீழ்கண்ட நோய்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவற்றைப் பற்றி இப்போது காண்போம். 


👉🏼 ​சர்க்கரை வியாதி :​ 


காலையில் சாப்பிடாமல் இருந்தால் குறிப்பாக பெண்களுக்கு , இன்சுலின் சுரப்பதில் பாதிப்புகள் உண்டாகி, டைப்-2 சர்க்கரை வியாதி உண்டாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 



👉🏼 ​முடி உதிர்வு :​ 


கூந்தல் கற்றைகளுக்கு தேவையான கெரட்டின் உருவாக காலையில் சாப்பிடும் புரத உண்வால் அளிக்க முடியும். காலையில் உணவை தவிர்ப்பதால் போதிய புரதம் கிடைக்கப்பெறாமல் முடி உதிர்வு சொட்டை உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாம். 


​மைக்ரைன் :​ 


ஒற்றை தலைவலி எனப்படும் மைக்ரேனால் , காலை உணவை தவிர்ப்பவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. காலையில் சாப்பிடாமல் இருக்கும்போது சர்க்கரை அளவு குறைந்து, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் ஒற்றை தலைவலி உண்டாகும். 


👉🏼 ​பலதரப்பட்ட நோய்கள் :​ 


காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு உடல் பருமன், ரத்த அழுத்தம், இவை மெல்ல உருவாகி இதனால் இதயத்தின் செயல்கள் பாதிக்கப்பட்டு இதய நோய்கள் உருவாகும் சாத்தியங்கள் உள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர். 


👉🏼 ​காலை உணவு :​ 

ஒரு நாள் உழைக்க தேவையான எனர்ஜி மற்றும் செல்களுக்கு தேவையான சத்துக்கள் காலை உணவிலிருந்தே பெறப்படுகின்றன. ஆகவே காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்ப்பது மிகவும் தவறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here